சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மனித எலும்புக்கூடு செஞ்சி அருகே பரபரப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை : காணாமல் போன முதியவர், ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வளத்தி கிராமத்தில் உள்ள மாந்தாங்கல் ஏரியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வளத்தி போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். ஏரி புதரில், கைலி மற்றும் சட்டையுடன் ஆண்

அவலுார்பேட்டை : காணாமல் போன முதியவர், ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வளத்தி கிராமத்தில் உள்ள மாந்தாங்கல் ஏரியில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக, போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், வளத்தி போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். ஏரி புதரில், கைலி மற்றும் சட்டையுடன் ஆண் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது.எலும்புக்கூட்டை கைப்பற்றிய போலீசார், இறந்த நபர் யார், எப்படி இறந்தார் என விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர். அதில், வளத்தியை சேர்ந்த சாமி (எ) கோவிந்தசாமி,66; என்பவர், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் காணாமல் போனது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமியின் குடும்பத்தினர், எலும்புக்கூட்டில் இருந்த கைலி மற்றும் சட்டையை பார்த்ததும், எலும்புக் கூடாக இருப்பது காணாமல் போன சாமி என்பதை உறுதி செய்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார், எலும்புக் கூட்டை பரிசோதனைக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், ஏற்கனவே பதிவு செய்த காணாமல் போனவர் வழக்கை சந்தேக மரணம் பிரிவில் மாற்றம் செய்து, சாமி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.காணாமல் போன முதியவர், நான்கு மாதங்களுக்கு பிறகு ஏரியில் இறந்து, எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் வளத்தி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X