வெல்லம், சர்க்கரை, சாராயம் கடத்தல் லாரியுடன் இரு வாலிபர்கள் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெல்லம், சர்க்கரை, சாராயம் கடத்தல் லாரியுடன் இரு வாலிபர்கள் கைது

Added : மே 05, 2021
Share
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மினி லாரியில் சாராயம், வெல்லம்,சர்க்கரை ஆகியவற்றை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த மூலக்காடு சோதனைச் சாவடியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ,ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே மினி லாரியில் சாராயம், வெல்லம்,சர்க்கரை ஆகியவற்றை கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த மூலக்காடு சோதனைச் சாவடியில் நேற்று வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ,ஏட்டு ஜெயபிரகாஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 12 மூட்டை சர்க்கரை, 250 கிலோ வெல்ல மூட்டை, 120 லிட்டர் சாராயம் மற்றும் 500 பாக்கெட் குட்கா ஆகியவை இருப்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, சேராப்பட்டை சேர்ந்த தீர்த்தன் மகன் கார்த்தி,24; சந்திரன் மகன் சுரேஷ்,23; ஆகியோரை கைது செய்து, வெல்லம், சர்க்கரை மற்றும் சாராயத்துடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X