பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளில் மின்தடை தவிர்க்க வாரியம் நடவடிக்கை

Added : மே 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : கொரோனா பரவல் எதிரொலியாக மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் தினமும் புதிதாக 200 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் மருத்துவமனைகளில் மின் வினியோகம்

திண்டுக்கல் : கொரோனா பரவல் எதிரொலியாக மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் தினமும் புதிதாக 200 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் மருத்துவமனைகளில் மின் வினியோகம் திடீரென தடைபடுவது, நோயாளிக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே, மின்வாரியத்தினர் கவனமுடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது.

அவசர காலத்தில் தகவல் தெரிவிக்க, அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பொறுப்பாளரின் பெயர், தொடர்பு எண்ணை பெற்று சுகாதாரத்துறை மின்வாரியத்திற்கு பட்டியல் வழங்கியுள்ளது. மின்சார பிரச்னைகள் ஏற்படும் போது உடனடியாக தகவல் அறிந்து, தீர்வு காண மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். மருத்துவமனைகளுக்கு மின் வினியோகத்திற்கான டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், ஒயர்கள் பழுதடைந்து இருந்தால் அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. மின் பழுது இருந்தாலும் உடனே சரிசெய்ய வாரியத்தினர் எந்நேரமும் 'அலர்ட்'டாக உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X