அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முதல் முறையாக 'மாஜி' முதல்வர் மகனுக்கு வாய்ப்பு

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (108)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில், முதல் முறையாக, முன்னாள் முதல்வரின் மகன், முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.இந்தியாவில், காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர்களாக இருந்த ஷேக் அப்துல்லா மகன் பரூக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா, முப்தி முகமது சயித் மகள் மெகபூபா, ஒடிசாவில் முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக்.ஹரியானாவில் முதல்வராக இருந்த தேவிலால் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா,
MK Stalin, Stalin, Karunanidhi

சென்னை : தமிழகத்தில், முதல் முறையாக, முன்னாள் முதல்வரின் மகன், முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்தியாவில், காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர்களாக இருந்த ஷேக் அப்துல்லா மகன் பரூக் அப்துல்லா, பேரன் உமர் அப்துல்லா, முப்தி முகமது சயித் மகள் மெகபூபா, ஒடிசாவில் முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் மகன் நவீன் பட்நாயக்.

ஹரியானாவில் முதல்வராக இருந்த தேவிலால் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா, உத்தர பிரதேசத்தில் முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ், கர்நாடகாவில் முதல்வராக இருந்த தேவகவுடா மகன் குமாரசாமி.ஒன்றுபட்ட ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர், அந்தந்த மாநிலங்களில், முதல்வர் பதவிக்கு வந்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தில், 1952 முதல் முதல்வர்களாக இருந்த ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம் - பழனிசாமி ஆகியோரது வாரிசுகள், முதல்வர்களாக இருந்தது இல்லை.இதில், காமராஜர், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகவில்லை. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., - ஜானகி ஆகியோருக்கு குழந்தைகள் இல்லை. ராஜாஜி, பக்தவச்சலம் ஆகியோருக்கு குழந்தைகள் இருந்தும், அரசியலுக்கு வரவில்லை.


latest tamil news


முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி., யாக உள்ளார். பழனிசாமி மகன் மிதுன் அரசியலுக்கு வரவில்லை. இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் ஸ்டாலின், தமிழகத்தில் முதல் முறையாக, மே 7ல் முதல்வராகிறார்.

இதன் மூலம், தென் மாநிலங்களில் வாரிசு முதல்வர் பட்டியலில், தமிழகமும் சேர உள்ளது. கேரளா மற்றும் புதுச்சேரியில், இதுவரை முன்னாள் முதல்வர் மகன்கள் யாரும் முதல்வர் பதவிக்கு வரவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-மே-202116:09:10 IST Report Abuse
Rafi இங்கு குறிப்பிட்டுள்ள அணைத்து வாரிசுகளையும், திரு ஸ்டாலினோடு ஒப்பிட முடியாது, அந்த வாரிசுகளின் வயதை தாண்டி திரு ஸ்டாலின் அரசியலில் கால் பதித்து அவருடைய தந்தையை போலெ அடிமட்டத்திலிருந்து சிறுக, சிறுக உயர்ந்து தான் இப்பதவிக்கு வந்துள்ளார், மேலும் குறிப்பிட்டுள்ள வாரிசுகளுக்கு இல்லாத அளவுகடந்த எதிர்ப்பை திரு ஸ்டாலின் சந்தித்து தான் இப்பதவிக்கு வந்துள்ளார், அவர் ஏற்கனவே குறிப்பிட்டது நினைவில் வருகின்றது, என்னுடைய உழைப்புக்கு (கட்சி பனி) முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் அவருடைய தந்தையும், திரு பேராசிரியர் அவர்களும் தான், எதிரிகளால், வரம்பு மீறிய குற்றச்சாட்டிற்கு கூட என்னால் சுதந்திரமாக பதில் அளிக்க விடாமல் பொறுமையாக இருக்கவே அறிவுத்தினார்கள், அவருடைய பொறுமையே அவரை பக்குவப்படுத்தி அவருக்கென்று அரசியலில் வழிமுறைகளை ஏற்படுத்தி மக்கள் சேவைக்கு முன்னுதாரணமாக இருந்துள்ளார்.
Rate this:
Cancel
SakthiBahrain - Manama,பஹ்ரைன்
06-மே-202113:57:28 IST Report Abuse
SakthiBahrain எல்லாம் விதி...
Rate this:
pazhaniappan - chennai,இந்தியா
09-மே-202121:14:07 IST Report Abuse
pazhaniappanஹி ஹி ஹி , ஐஸ் வாட்டர் குடிங்கோ...
Rate this:
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
06-மே-202110:06:57 IST Report Abuse
Padmanaban Jayakrishnan திமுக ஜெயித்த அடுத்த நாளே முழு பக்கத்துக்கு கருப்பு சிவப்பு கொடியுடன் செய்தி போட்டுட்டு இணையதளத்தில் மட்டும் கிண்டல் கேலி செய்வது தான் வீரம் போல ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X