இந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம்: பிரபல நிபுணர் அறிவுரை

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
வாஷிங்டன்: 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் இந்தியா தன் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும். சில வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவிக்கலாம்' என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன் மருந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களை
India, Lockdown, AnthonyFauci, US, White House, இந்தியா, ஊரடங்கு, பவுசி, வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: 'கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பணியில் இந்தியா தன் ராணுவத்தை ஈடுபடுத்த வேண்டும். சில வாரங்களுக்கு முழு ஊரடங்கை அறிவிக்கலாம்' என அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆன்டனி பாசி கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன் மருந்து தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பொருட்களை அனுப்பி வைத்து பல நாடுகள் உதவி வருகின்றன.தொற்றுநோய் சிகிச்சை நிபுணரான அமெரிக்க அதிபரின் ஆலோசகர் டாக்டர் பாசி இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து கூறியுள்ளதாவது:
இந்தியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை அமெரிக்காவை போல மற்ற நாடுகளும் செய்ய வேண்டும்.


latest tamil newsதடுப்பூசி வழங்கும் பணியை வேகப்படுத்த வேண்டும்; விரிவுபடுத்த வேண்டும். மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கும் இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்கான பலன் உடனடியாக கிடைக்காவிட்டாலும் வைரஸ் பரவலை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.உடனடி நிவாரணமாக தன்னிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் இந்தியா பயன்படுத்த வேண்டும். தற்காலிக மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் சில வாரங்களுக்கு முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
05-மே-202120:42:35 IST Report Abuse
vbs manian இவருக்கு நம்ம ஊர் அரசியல் வாதிகளை பற்றி தெரியாது. ஊரடங்கு போட்டால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அநியாயம் என்று போராட்டம் செய்வார். போடாவிட்டால் போடு என்பர்.இன்னொரு விஷயம் அமெரிக்கா போன்று இங்கு பொதுவாழ்வில் கட்டுப்பாடு ஒழுங்கு நோய் கட்டுப்பாட்டில் தவறாமல் பின்பற்றுதல் இல்லை. சீனாவில் துப்பாக்கி துணையோடு ஊரடங்கு வெற்றி. இந்தியாவில் நடக்காத காரியம்.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
05-மே-202120:38:46 IST Report Abuse
Rengaraj ஒரு பக்கம் இங்கு தடுப்பூசி தீவிரமாக போடப்படவேண்டும். அதே சமயம் மகாராஷ்டிரா அரசு செய்தது போன்று இப்போது அறிவித்து இருக்கிறார்களே பகுதி ஊரடங்கு , அதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மக்கள் நடமாட்டம் குறைந்தால் தோற்று பரவல் குறைய ஆரம்பித்து விடும். முழு ஊரடங்கு தேவை இல்லை. போட்டாலும் கொஞ்ச நாட்கள் கழித்து அதை சில தளர்வுகள் என்று எடுத்து விடுவார்கள். அப்போது, குறைந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் கூடிவிடும். சங்கிலியை அறுக்க வேண்டும் என்றால் மக்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். ஊரடங்கு மட்டுமே பயன்தராது. மாநில அரசுகளின் கையில் தான் எல்லாம் இருக்கிறது. அந்த அந்த மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு விதிகளை அமைத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போட வேண்டும். ஒட்டு மொத்த ஊரடங்கு தேவையற்றது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
05-மே-202119:43:10 IST Report Abuse
M  Ramachandran மக்கள் அவர்களாக தான் எதிர்த்து போராட வேண்டும். நம் கவனக்குறைவு தான் இந்த தற்போதய நிலைக்கு காரணம்.அலட்சியம் செய்தோம் கூடவே இந்த ஐந்து மாநில தேர்தல் வந்தது. பரப்புரை மூலம் பரப்பிவிட்டு விட்டார்கள்.அவர்களை சொல்லி குற்ற மில்லை. அவர்களுக்கு வேண்டியது பதவி. மக்கள் இரண்டாம் பட்சம். நாம் தான் விழிப்புடன் இருந்திருந்தால் நன்மை. கூடிய மட்டிலும் இரன்டு முக கவசத்தை போட்டு கொண்டு மிக்க அவசிய மானால் மட்டும் போக வேண்டும். வெளி சென்று வந்த வுடன் நிச்சயம் கை கழுவி வரவேண்டும். இப்போது சென்னை யில் மிக மோச மான நிலையில் பரவிக்கொண்டு வருகிறது. நோய் தோற்று இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு பரவி கொண்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவ மனையை மட்டும் நம்பி பயனில்லை. கூடிய மட்டிலும் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டியது. நாளை முதல் இருபதாம் தேதி வரை ஊராட்ங்கள் மாற்றத்துடன் அரசு கடை பிடிக்கிறது. இதில் அரசை குறை கூறாமல் நாமும் ஒத்துழைப்பை தந்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X