பொது செய்தி

தமிழ்நாடு

குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்துக்கு திறப்பு நிறுத்தம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கோபி: கோபி, கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. மொத்தம், 42 அடிக்கு நீர் தேக்கலாம். இதன் மூலம், வலது, இடது கரை பாசனமாக, 2,498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த, 2ம் தேதி, அணை நீர்மட்டம், 24 அடியாக இருந்தது. அன்றிரவு அணை நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கெம்பனூர், மல்லியம் துருவம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை

கோபி: கோபி, கொங்கர்பாளையம் கிராமத்தில், குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. மொத்தம், 42 அடிக்கு நீர் தேக்கலாம். இதன் மூலம், வலது, இடது கரை பாசனமாக, 2,498 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடந்த, 2ம் தேதி, அணை நீர்மட்டம், 24 அடியாக இருந்தது. அன்றிரவு அணை நீர்பிடிப்பு பகுதிகளான குன்றி, விளாங்கோம்பை, கெம்பனூர், மல்லியம் துருவம் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் அதிகாலை முதல், 200 கன அடிக்கும் அதிகமாக, நீர்வரத்தானது. இதனால் அணை நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று காலை, 35.18 அடியாக இருந்தது. இரு நாட்களில் மட்டும், 11 அடி உயர்ந்துள்ளது. கடந்த மார்ச், 26 முதல், 30 நாட்கள் திறந்தும், சுழற்சி முறையில், பத்து நாட்கள் நிறுத்தியும், பாசனத்து நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் நிர்வாக அட்டவணைப்படி, இன்று காலை முதல், அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X