பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.3.90 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை

Added : மே 05, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,160 வாழைத்தார் கொண்டு வந்தனர். கதளி ஒரு கிலோ, 24 ரூபாய், நேந்திரன், 39 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 490 ரூபாய், தேன்வாழை, 580, செவ்வாழை, 650, ரொபஸ்டா, 390, மொந்தன், 200, பச்சைநாடன், 380, ரஸ்தாளி, 545, ரூபாய்க்கும் விலை போனது.

புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், 2,160 வாழைத்தார் கொண்டு வந்தனர். கதளி ஒரு கிலோ, 24 ரூபாய், நேந்திரன், 39 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 490 ரூபாய், தேன்வாழை, 580, செவ்வாழை, 650, ரொபஸ்டா, 390, மொந்தன், 200, பச்சைநாடன், 380, ரஸ்தாளி, 545, ரூபாய்க்கும் விலை போனது. விற்பனைக்கு வந்த, 2160 வாழைத்தார்களும், 3.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ரம்ஜான் நோன்பு காலம் என்பதால், வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

தேங்காய் பருப்பு ஏலம்: அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 2,000 காய்கள் வரத்தானது. ஒரு காய், 4.32 ரூபாய் முதல், 17.24 ரூபாய் வரை விலை போனது. தேங்காய் பருப்பு ஏலத்துக்கு, 29 மூட்டை வரத்தானது. கிலோ, 100.29 ரூபாய் முதல், 106.21 ரூபாய் வரை ஏலம் போனது. எள் ஏலத்தில், 27 மூட்டை வரத்தாகி கிலோ, 93.19 ரூபாய் முதல், 102.36 ரூபாய் வரை விற்பனையானது. மக்காச்சோளம் ஐந்து மூட்டை வரத்தானது. கிலோ, 17.89 ரூபாய்க்கு விலை போனது.

தேங்காய் ஏலம்: சென்னிமலை அருகே, வெப்பிலி சொசைட்டியில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 6,374 காய்கள் வரத்தாகின. கிலோ, 27.60 ரூபாய் முதல், 33.73 ரூபாய் வரை ஏலம் போனதாக, விற்பனைக் கூட கண்காணிப்பாளர் லட்சுமணன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X