பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடின்றி ரயில் டிக்கெட் விற்பனை

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: தற்போது கொரோனா இரண்டாவது அலை பீதியால், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வது அதிகரித்துள்ளது. இவர்களுக்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், கட்டுப்பாடற்ற முறையில், பயண டிக்கெட் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது: ஆலப்புழா-பாட்னா ரயிலில், நேற்று முன்தினம் பாட்னா செல்ல, முன்பதிவு

ஈரோடு: தற்போது கொரோனா இரண்டாவது அலை பீதியால், ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வது அதிகரித்துள்ளது. இவர்களுக்கு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், கட்டுப்பாடற்ற முறையில், பயண டிக்கெட் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது: ஆலப்புழா-பாட்னா ரயிலில், நேற்று முன்தினம் பாட்னா செல்ல, முன்பதிவு டிக்கெட் மையத்தில், 730 டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அதிகளவில் டிக்கெட் வழங்கினால் சமூக இடைவெளி எவ்வாறு கடைபிடிக்க முடியும். ரயிலில் தொங்கியபடி செல்கின்றனர். ரயிலில் ஏறி போலீசார், அலுவலர்கள் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும். கட்டுப்பாடின்றி டிக்கெட் வழங்காமல், ஆர்.ஏ.சி., வரும் வரை மட்டுமே, டிக்கெட் வழங்க வேண்டும். அதன் பின் வழங்கக்கூடாது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், டிக்கெட் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும். வட மாநிலம் செல்லும் ரயில்களில், சில நாட்களாக சமூக இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X