பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு; வங்கிகள், அரசு அலுவலகம் மூடல்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா தொற்றால் கனரா வங்கி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டன. விதிமுறையை கடைபிடிக்காததால், ஒரு வங்கி கிளையும் மூட உத்தரவிடப்பட்டது.ஈரோடு, காந்திஜி சாலை, கச்சேரி சாலையில் இயங்கி வரும், கனரா வங்கி ஊழியர்களில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவ்வங்கி கிளை மூடப்பட்டது. ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள, கால்நடைத்துறை மண்டல இணை

ஈரோடு: கொரோனா தொற்றால் கனரா வங்கி, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூடப்பட்டன. விதிமுறையை கடைபிடிக்காததால், ஒரு வங்கி கிளையும் மூட உத்தரவிடப்பட்டது.


ஈரோடு, காந்திஜி சாலை, கச்சேரி சாலையில் இயங்கி வரும், கனரா வங்கி ஊழியர்களில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவ்வங்கி கிளை மூடப்பட்டது. ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் உள்ள, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பணி செய்வோர் சிலருக்கு, தொற்று ஏற்பட்டதால், அந்த அலுவலகமும் மூடப்பட்டது. பவானி, காளிங்கராயன்பாளையத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்தார். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காததாலும், முக கவசம் அணியாததாலும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, வங்கியை நாளை (இன்று) முதல் மூட உத்தரவிட்டார். நசியனூரில் கொரோனா வழிகாட்டல் நெறிமுறையை கடைப்பிடிக்காத கறிக்கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். இதுகுறித்து கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மாவட்ட அளவில் கொரோனா பாதித்து, 3,419 பேர் சிகிச்சையில் உள்ளனர். பவானி, தண்டாம்பாளையம், செண்பகபுதூர் என, 110 தனிமை பகுதிகளில், 2,800 வீடுகளில், 8,800 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் வரை, 5.29 லட்சம் பேர், தொற்று பரிசோதனை செய்துள்ளனர். ஒரு லட்சத்து, 41,397 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X