பொது செய்தி

தமிழ்நாடு

கோபியை கோட்டை விட்டதால் தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோபி: கோபி தொகுதியை கோட்டை விட்டதால், தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில், கோபி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படுகிறது. எட்டாவது முறையாக அக்கட்சி வேட்பாளராக செங்கோட்டையன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், இரண்டாவது முறையாக மணிமாறன் போட்டியிட்டார். தேர்தலிலும், 82.52 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இதில், 28 ஆயிரத்து, 563 ஓட்டுகள்

கோபி: கோபி தொகுதியை கோட்டை விட்டதால், தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டத்தில், கோபி தொகுதி, அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படுகிறது. எட்டாவது முறையாக அக்கட்சி வேட்பாளராக செங்கோட்டையன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், இரண்டாவது முறையாக மணிமாறன் போட்டியிட்டார். தேர்தலிலும், 82.52 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இதில், 28 ஆயிரத்து, 563 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, எட்டாவது முறையாக செங்கோட்டையன் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து தி.மு.க.,வினர் கூறியதாவது: ஏழு முறை தொகுதியை தக்க வைத்திருந்த, செங்கோட்டையனுக்கு போட்டியாக, வேட்பாளரை நிறுத்துவதில் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டது. வாய்ப்பு கேட்டவர்கள் பெரும்பாலும், மாற்று கட்சியினர் என்பதால், தலைமைக்கு சந்தேகம் இருந்தது. அதனால் முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கிடுவின் மகன் மணிமாறனுக்கு, இரண்டாவது முறையாக வாய்ப்பு போனது. இதனால் கட்சியினர் சுணக்கம் அடைந்தனர். தவிர மாவட்ட செயலாளர் நல்லசிவத்தின் செயல்பாடு, அரவணைத்து திட்டமிடாத தேர்தல் பணி, நிர்வாகிகளின் உள்குத்தால், தி.மு.க., தோல்வியடைந்தது. ஓட்டு எண்ணிக்கையில், 25 சுற்றில், ஒரு சுற்றில் கூட, மணிமாறன் கூடுதல் ஓட்டு பெறவில்லை. கட்சி ரீதியாக தொகுதியில் இதே நிலை நீடித்தால், செங்கோட்டையனை வீழ்த்துவது இயலாத காரியமாகவே இருக்கும். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், கோபி தொகுதிக்குள், கட்சி ரீதியாக நிர்வாக மாற்றத்தை, மேலிடம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-மே-202117:36:26 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எவனை நிறுத்தினாலும் கோபி என்றும் அதிமுக கோட்டை. MGR காலத்திலிருந்து அதை அசைக்க பலரும் முயன்று அவமானப்பட்டதுதான் மிச்சம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X