பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலர்களுக்கு 'பெப்பே'; முக கவசம் அணியாதவர்களுக்கு போலீஸ் மூலம் அபராதம் விதிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிவது கட்டாயம் என்று, ஓராண்டாக அரசு மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பலர் மெத்தனமாகவே உள்ளனர். கவசம் அணியாமல், பொது இடங்களில் தும்மி, எச்சில் துப்பி, கொரோனா பரப்புரையாளர்களாக மாறினர். இதனால் கொரோனாவும் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. அறிவுரை தந்து வெறுத்துப்போன அதிகாரிகளும், அபராதம் விதிக்கும் நிலைக்கு

ஈரோடு: கொரோனா பரவலை தடுக்க, முக கவசம் அணிவது கட்டாயம் என்று, ஓராண்டாக அரசு மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பலர் மெத்தனமாகவே உள்ளனர். கவசம் அணியாமல், பொது இடங்களில் தும்மி, எச்சில் துப்பி, கொரோனா பரப்புரையாளர்களாக மாறினர். இதனால் கொரோனாவும் அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. அறிவுரை தந்து வெறுத்துப்போன அதிகாரிகளும், அபராதம் விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது முக கவசம் அணியாமல், பொது இடங்களில் திரிவோருக்கு, ??? ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தப்பணியில் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில், அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், முக கவசம் அணியாத பலர், மாநகராட்சி அலுவலர்களை மதிக்காமல், வாகனத்தை நிறுத்தாமல் செல்வதும், வாக்குவாதம் செய்வதும் அதிகரித்தது. இதனால் போலீஸ் உதவியை, மாநகராட்சி நிர்வாகம் நாடியது. இதையடுத்து நேற்று முதல், மாநகராட்சி அலுவலகம் முன், டவுன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முககவசம் அணியாமல் சென்றோருக்கு அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X