பொது செய்தி

தமிழ்நாடு

'சிறுபான்மை மக்கள் வாக்களிக்கவில்லை'

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் யுவராஜா, காங்., சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டனர். இதில் திருமகன் வென்றார். தோல்வி அடைந்த யுவராஜா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: எனக்கு வாய்ப்பளித்த அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், எனக்காக களப்பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்கள்,

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் யுவராஜா, காங்., சார்பில் திருமகன் ஈவெரா போட்டியிட்டனர். இதில் திருமகன் வென்றார். தோல்வி அடைந்த யுவராஜா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: எனக்கு வாய்ப்பளித்த அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், எனக்காக களப்பணியாற்றிய கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி. கிழக்கு தொகுதியில் பெரும்பான்மை மக்கள், கூட்டணி வெற்றி பெற வாக்களித்தனர். அதேநேரம், எதிர்கட்சியின் பொய் பிரசாரத்தால், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்கள், எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை. இதுவே எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. ஆனாலும், எங்கள் கூட்டணியை பொருத்தவரை, அனைத்து தரப்பு மக்கள் உரிமைக்கும், தொடர்ந்து குரல் கொடுப்போம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-மே-202117:33:37 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan தேசத்துரோகிகள் என்றும் திமுகவுக்குத்தான் வாக்களிப்பர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X