சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகள் மிரட்டல்; 75 வயது மாமியார் புகார்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: வீட்டை விட்டு ஓடுமாறு, மருமகள் மிரட்டுவதாக, எஸ்.பி.,யிடம் மூதாட்டி மனு அளித்தார். மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, பல்லக்காட்டு புதூரை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75; ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மகன் ஈஸ்வரனுக்கும், சின்னதாராபுரம் காசிபாளையம் சங்கீதாவுக்கும், 38, திருமணம் ஆனது, கடந்த, 2017 ஜூலை 12ல் மகன் இறந்து விட்டார். மகன்

ஈரோடு: வீட்டை விட்டு ஓடுமாறு, மருமகள் மிரட்டுவதாக, எஸ்.பி.,யிடம் மூதாட்டி மனு அளித்தார். மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, பல்லக்காட்டு புதூரை சேர்ந்தவர் கண்ணம்மாள், 75; ஈரோடு எஸ்.பி., தங்கதுரையிடம், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மகன் ஈஸ்வரனுக்கும், சின்னதாராபுரம் காசிபாளையம் சங்கீதாவுக்கும், 38, திருமணம் ஆனது, கடந்த, 2017 ஜூலை 12ல் மகன் இறந்து விட்டார். மகன் பெயரில் நன்செய் ஊத்துக்குளி பல்லகாட்டு புதூரில், ?,500 சதுர அடியில் இடம் உள்ளது. அந்த இடத்தில், 2013ல் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்ட, மகன், மருமகள் கையெழுத்து வாங்கினர். அதில், 800 சதுர அடியில் பசுமை வீடு கட்டி, மருமகள் பெயரில் கிரயம் செய்யப்பட்டது பின்னர் தெரிந்தது. கடந்த, 2019ல் என் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் மருத்துவ செலவுக்கு கூட, மருமகள் பணம் தர மறுக்கிறார், இதுதொடர்பாக மொடக்குறிச்சி போலீசார், சமரசம் செய்து வைத்தனர். தற்போது உனக்கு வீடில்லை. வீட்டை விட்டு ஓடி விடு என, மருமகள் மிரட்டுகிறார். இதனால் மகள் வீட்டுக்கு சென்று விட்டேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X