சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் மூதாட்டி கொலை: 7 பவுன் நகைக்காக வெறி

Added : மே 05, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் ஏழு பவுன் நகைக்காக, மூதாட்டி கொலை செய்யப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். சில ஆண்டுக்கு முன் இறந்தார். இவர் மனைவி மணிமேகலை, 65. இவர்களின் மகன் ரவி, மகள் ராணி. இதில் ரவியும் இறந்து விட்டார். ராணி தன் கணவருடன், ஈரோடு, சூளை,

ஈரோடு: ஈரோட்டில் ஏழு பவுன் நகைக்காக, மூதாட்டி கொலை செய்யப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு, மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர். சில ஆண்டுக்கு முன் இறந்தார். இவர் மனைவி மணிமேகலை, 65. இவர்களின் மகன் ரவி, மகள் ராணி. இதில் ரவியும் இறந்து விட்டார். ராணி தன் கணவருடன், ஈரோடு, சூளை, ஈ.பி.பி.நகரில் வசிக்கிறார். மணிமேகலை தனியே வசித்தார். தினமும் இரவில், தன் தாயாரை பார்க்க, ராணி செல்வது வழக்கம். நேற்றிரவு வழக்கம்போல், 7:00 மணியளவில் மணிமேகலையை பார்க்க ராணி வந்தார். வீட்டு முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் வீட்டுக்குள், டிவி ஓடும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன், பூட்டை உடைத்து உள்ளே சென்றார். மணிமேகலை இறந்த நிலையில் கிடந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மணிமேகலை கழுத்தில் லேசான ரத்த காயம் இருந்தது. தலையில் கட்டை அல்லது இரும்பு ராடால் தாக்கியதில் இறந்தது தெரிய வந்தது. அவர் போட்டிருந்த ஏழு பவுன் தங்கச்சங்கிலி காணவில்லை. எனவே நகைக்காக கொலை நடந்திருக்கலாம். ஒன்று அல்லது மேற்பட்ட நபர்கள், ஈடுபட்டிருக்கலாம் என்று, போலீசார் தெரிவித்தனர். எஸ்.பி., தங்கதுரை நேரில் ஆய்வு செய்தார். குடியிருப்பு நிறைந்த பகுதியில், மூதாட்டி கொல்லப்பட்டது, அப்பகுதிவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X