பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூரில் இதுவரை 144 பேர் பாதிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூரில் இதுவரை, 144 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆத்தூர் நகரில், நேற்று மட்டும், 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் முல்லை வாடியைச் சேர்ந்த, 60 வயது பெண், கடந்த, 2ல், கொரோனாவால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்ததால், அங்கேயே உடலை அடக்கம் செய்தனர். ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 39 வயதுடைய

ஆத்தூர்: ஆத்தூரில் இதுவரை, 144 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆத்தூர் நகரில், நேற்று மட்டும், 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் முல்லை வாடியைச் சேர்ந்த, 60 வயது பெண், கடந்த, 2ல், கொரோனாவால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று, அவர் உயிரிழந்ததால், அங்கேயே உடலை அடக்கம் செய்தனர். ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், 39 வயதுடைய இன்ஸ்பெக்டருக்கு, தொற்று ஏற்பட்டது. இதனால், நகராட்சி சுகாதார பணியாளர்கள், மகளிர் ஸ்டேஷன் முழுதும், நேற்று கிருமி நாசினி தெளித்தனர். தொற்று பாதிப்பு அதிகரிப்பதால், ஐந்து, ஏழாவது வார்டு, கீழ்பாரி தெரு, அவ்வையார் தெருக்களில், 20 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுத்தனர். மேலும், 16, 10, 21வது வார்டுகளில், செல்வவிநாயகர் கோவில், சீதக்காதி, கைலாசநாதர் கோவில், சிவாஜி தெருக்களில், காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, 200 பேருக்கு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கடந்த மார்ச், 8 முதல், இதுவரை, 144 பேருக்கு, தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, 84 பேர் மருத்துவமனையில் உள்ளனர். 53 பேர் குணமடைந்துள்ளனர்; 7 பேர் இறந்தனர். நோய் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது' என்றனர்.


23 பேருக்கு அபராதம்: ஆத்தூர் நகரில், முக கவசம் அணியாத, 23 பேருக்கு, 4,600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20 வணிக வளாக கடைகளில், சமூக இடைவெளி, முக கவசம் அணிவது, 3,000 சதுரடிக்கு மேல் உள்ள வணிக வளாகம் மூடப்பட்டுள்ளதா உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தனர்.

தறித்தொழிலாளி பலி: ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரியை சேர்ந்த, 62 வயது முதியவர் தறித்தொழிலாளி. இவர், கடந்த ஏப்., 30ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஈரோடு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் சிகிச்சை பெற்ற பின், கடந்த, 1 முதல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். வீரபாண்டி சுகாதார ஆய்வாளர்கள், தினமும் அவரது உடல்நிலை குறித்து கண்காணித்தனர். நேற்று முன்தினம் இரவு, 12:00 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனைக்கு, அவரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி, நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொழிலாளிக்கு, இரு மனைவியர், இரு மகன்கள் உள்ளனர். அவர் வசித்த சென்னகிரி, மற்றொரு மனைவி வசிக்கும் தானகுட்டி பாளையம் வீடுகளில் இருந்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என, 11 பேருக்கு சுகாதாரத்துறையினர் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து, அனைவரையும் வீடுகளிலேயே தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X