பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியில் 2 நாளில் ரூ.1.08 லட்சம் அபராதம் வசூல்

Added : மே 05, 2021
Share
Advertisement
சேலம்: மாநகராட்சியில் விதிமீறியதற்காக, 2 நாளில், 1.08 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க, சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினமும், நேற்றும், அவர்கள் ஆய்வு நடத்தினர். அதில், முக கவசம் அணியாத, 121 பேரிடம், தலா, 200 ரூபாய், சமூக இடைவெளி

சேலம்: மாநகராட்சியில் விதிமீறியதற்காக, 2 நாளில், 1.08 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதிகளில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களை கண்காணிக்க, சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினமும், நேற்றும், அவர்கள் ஆய்வு நடத்தினர். அதில், முக கவசம் அணியாத, 121 பேரிடம், தலா, 200 ரூபாய், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத, 38 சிறு வணிக நிறுவனங் களிடம், தலா, 500 ரூபாய், 13 பெரு நிறுவனங்களுக்கு தலா, 5,000 ரூபாய் என, 1.08 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், சீலநாயக்கன்பட்டியில் மருத்துவ கழிவை உரிய முறையில் அகற்றாமல், குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X