பொது செய்தி

தமிழ்நாடு

மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்கு: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
பனமரத்துப்பட்டி: சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து, நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். மல்லூர், வெண்ணந்தூர், ராசிபுரம், மல்லசமுத்திரம் பகுதிகளில், பரிசோதனைக்கு மாவுப்பூச்சி மாதிரிகளை சேகரித்தனர். இதுகுறித்து, வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது:

பனமரத்துப்பட்டி: சேலம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள், சேலம், நாமக்கல் மாவட்டங்களில், மரவள்ளியில் மாவுப்பூச்சி தாக்குதல் குறித்து, நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். மல்லூர், வெண்ணந்தூர், ராசிபுரம், மல்லசமுத்திரம் பகுதிகளில், பரிசோதனைக்கு மாவுப்பூச்சி மாதிரிகளை சேகரித்தனர். இதுகுறித்து, வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது: நோய் தாக்கிய மரவள்ளி பயிரின் நுனி குருத்துகளை அகற்றுதல், முற்றிலும் பாதிக்கப்பட்ட செடிகளை சேகரித்து அழிக்க வேண்டும். ஆரம்ப நிலையில், ஒரு லிட்டர் நீரில், அசாடிராக்ட்டின், 0.15 சதவீதம் கலந்து தெளிக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால், ஒரு லிட்டர் நீரில், பிலோனிக்காமிட், 50 டபியுஜி, 0.30 கிராம் அல்லது தயாமீதாக்சாம், 25 டபியுஜி, 0.50 கிராம் அல்லது ஸ்பைரோடேற்றாமேட், 150 ஒ.டி., 1.25 மி.லி., கலந்து, கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். செடிகளின் அனைத்து பாகங்கள், வயல், வரப்பு செடிகள், களைகள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். வயல் ஆய்வில், மரவள்ளி, ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X