அரசு மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள்; ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளித்த பரிதாபம்| Dinamalar

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள்; ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை அளித்த பரிதாபம்

Added : மே 05, 2021
Share
சேலம்: அரசு மருத்துவமனையில், கொரோனா பிரிவில் படுக்கைகள் நிரம்பியதால், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.சேலம் மாவட்டத்தில், சில நாளாக, கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும், 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று முன்தினம், 600ஐ தாண்டியது. சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பிரிவு, 800

சேலம்: அரசு மருத்துவமனையில், கொரோனா பிரிவில் படுக்கைகள் நிரம்பியதால், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


சேலம் மாவட்டத்தில், சில நாளாக, கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும், 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று முன்தினம், 600ஐ தாண்டியது. சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பிரிவு, 800 படுக்கை வசதியுடன் செயல்படுகிறது. இதில் முழுமையாக நோயாளி கள் நிரம்பியதால், புதிதாக வந்த நோயாளிகளை சேர்க்க முடியாத நிலை உருவானது. அதேபோல், சேலம் மாவட்டத்தில், 38 தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, 1,600க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவையும் முழுமையாக நிரம்பிவிட்டன. நேற்று, தனியார் மருத்துவமனைகளிலிருந்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு, 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில், கொரோனா நோயாளிகள் அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு, மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், 36 வயது பெண், 47, 49 வயது ஆண்கள் என, மூன்று பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை வளாகத்தில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால், மற்ற நோயாளிகள் இடையே பதற்றம் ஏற்பட்டது.

டீன் முருகேசன் கூறியதாவது: தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அந்த வசதியுடன் கூடிய படுக்கைக்கு தட்டுப்பாடாக உள்ளது. இதனால், அவர்கள் மேல் சிகிச்சைக்கு இங்கு அனுப்புகின்றனர். இங்குள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய, 800 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதுகுறித்து தனியார் மருத்துவமனைகளிடமும் தெரிவிக்கப்பட்டு, நோயாளிகளை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தகவல் தெரிவிக்காமலே இங்கு அனுப்புகின்றனர். இதனால், படுக்கை ஒதுக்க முடியாமல் ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நிலை உருவாகிறது. ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மேலும், 200 படுக்கை வசதி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து திரும்பினால்தான் புதிதாக வருபவர்களுக்கு படுக்கை ஒதுக்க முடியும். இதனால், உயிரிழப்பு கைமீறி செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X