பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டார்ச், ஜவ்வரிசி விலை சரிவு

Added : மே 05, 2021
Share
Advertisement
சேலம்: வடமாநிலங்களில் ஊரடங்கால், வியாபாரிகள், ஸ்டார்ச், ஜவ்வரிசி கொள்முதலை நிறுத்தியதால், அதன் விலை சரிந்துள்ளது.டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள், கர்நாடகாவிலும், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், சேலம் சேகோசர்வ், மில்களில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் கொள்முதலை நிறுத்தி விட்டனர். நேற்று, ஜவ்வரிசி விலை

சேலம்: வடமாநிலங்களில் ஊரடங்கால், வியாபாரிகள், ஸ்டார்ச், ஜவ்வரிசி கொள்முதலை நிறுத்தியதால், அதன் விலை சரிந்துள்ளது.


டில்லி, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்கள், கர்நாடகாவிலும், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், சேலம் சேகோசர்வ், மில்களில், ஜவ்வரிசி, ஸ்டார்ச் கொள்முதலை நிறுத்தி விட்டனர். நேற்று, ஜவ்வரிசி விலை மூட்டைக்கு,(90 கிலோ) 440 ரூபாய், ஸ்டார்ச் விலை, 95 ரூபாய் சரிந்தது. அதன்படி, ஜவ்வரிசி, 3,260 ரூபாய், ஸ்டார்ச், 2,550 ரூபாய்க்கு விற்பனையானது. இதன் எதிரொலியாக, தரத்துக்கேற்ப, மரவள்ளிக்கிழங்கு விலை டன்னுக்கு, 500 முதல், 1,000 ரூபாய் வரை குறைந்தது. அதன்படி, டன், 5,500 முதல், 8,000 ரூபாய் வரை விற்றது, நேற்று, 5,000 முதல், 7,000 ரூபாய் வரை விற்பனையானது. வடமாநில வியாபாரிகள் கொள்முதல் நிறுத்தத்தால், ஸ்டார்ச், ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கு விலை சரிந்ததால், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு உள்பட, 17 மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் சோகம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X