பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை திருமணத்தை தடுக்க ஊராட்சிகள் தோறும் குழு

Added : மே 05, 2021
Share
Advertisement
வீரபாண்டி: குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க, ஊராட்சிகள்தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக, குழந்தை திருமணங்கள் நடந்து வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க, சமூக நலத்துறை சார்பில், குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களுக்கு உதவ, ஊராட்சி தலைவர், சமூக நல விரிவாக்க அலுவலர், வி.ஏ.ஓ., மகளிர் சுய உதவிக்குழு செயலர், பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு பெண்

வீரபாண்டி: குழந்தை திருமணங்கள் நடப்பதை தடுக்க, ஊராட்சிகள்தோறும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக, குழந்தை திருமணங்கள் நடந்து வருவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க, சமூக நலத்துறை சார்பில், குழந்தை திருமண தடுப்பு அலுவலர்களுக்கு உதவ, ஊராட்சி தலைவர், சமூக நல விரிவாக்க அலுவலர், வி.ஏ.ஓ., மகளிர் சுய உதவிக்குழு செயலர், பள்ளி தலைமை ஆசிரியர், வார்டு பெண் கவுன்சிலர் அடங்கிய, குழந்தை திருமண தடுப்பு கண்காணிப்பு குழுக்கள், அனைத்து ஊராட்சிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவினர் மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி, ஊராட்சி பகுதிகளில் நடந்த குழந்தை திருமண எண்ணிக்கை, தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மக்கள் அறியும்படி, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆணின் திருமண வயது, 21 பெண்ணுக்கு, 18, குழந்தைகளுக்கு அவசர உதவி எண்: 1098, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்: 0427 - 2413213, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண்: 0427 -2415966 ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X