மகன் சிகிச்சையில் தகராறு; தாய் விபரீத முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகன் சிகிச்சையில் தகராறு; தாய் விபரீத முடிவு

Added : மே 05, 2021
Share
தலைவாசல்: மகனுக்கு மேல்சிகிச்சை அளிப்பது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார். தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், 32. இவரது மனைவி பிரியா, 21. இவர்களது மகன் சர்வீன்ராம், 2. குழந்தை பிறந்ததிலிருந்தே, அவருக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்னை இருந்தது. இதனால், வயிற்றில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

தலைவாசல்: மகனுக்கு மேல்சிகிச்சை அளிப்பது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த தாய் தற்கொலை செய்து கொண்டார். தலைவாசல், வேப்பம்பூண்டியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம், 32. இவரது மனைவி பிரியா, 21. இவர்களது மகன் சர்வீன்ராம், 2. குழந்தை பிறந்ததிலிருந்தே, அவருக்கு இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்னை இருந்தது. இதனால், வயிற்றில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மதியம், 3:00 மணிக்கு, பிரியா பூச்சி மருந்து குடித்ததாக, அவரது தாய் வசந்திக்கு, பன்னீர்செல்வம் தகவல் கொடுத்தார். அங்கு சென்ற வசந்தி, அவரது உறவினர்கள், பிரியாவை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார். வசந்தி புகார்படி, வீரகனூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். திருமணமான மூன்று ஆண்டில், பெண் இறந்ததால், ஆர்.டி.ஓ., விசாரிக்க, போலீசார் பரிந்துரைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X