சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொள்ளை வழக்கில் சிக்கியவரை காவலில் எடுத்து விசாரணை

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை, உப்பு ஓடை பாலத்தை சேர்ந்தவர் ருக்மணி, 40. இவரது வீட்டில், கடந்த பிப்., 18 நள்ளிரவு புகுந்த கும்பல், 10 பவுன் நகை, 5,500 ரூபாயை கொள்ளையடித்துச்சென்றது. மார்ச்சில், கள்ளக்குறிச்சி ராஜா, 32, முருகன், 34, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அலமேலு உள்பட, 9 பேர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதுவரை, ஏழு பேரை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், ஆத்தூர்

ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை, உப்பு ஓடை பாலத்தை சேர்ந்தவர் ருக்மணி, 40. இவரது வீட்டில், கடந்த பிப்., 18 நள்ளிரவு புகுந்த கும்பல், 10 பவுன் நகை, 5,500 ரூபாயை கொள்ளையடித்துச்சென்றது. மார்ச்சில், கள்ளக்குறிச்சி ராஜா, 32, முருகன், 34, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அலமேலு உள்பட, 9 பேர், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதுவரை, ஏழு பேரை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், ஆத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். இருவரை, தனிப்படை போலீசார் தேடுகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கள்ளக்குறிச்சி தங்கராசு, 46, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை, ஆத்தூர் டவுன் போலீசார், நேற்று, காவலில் எடுத்து, ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, கொள்ளை நடந்த வீட்டில் இச்சம்பவம் தொடர்பாக, போலீசாரிடம் செய்து காட்டினார். அவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், மாலை, கடலூர் சிறைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X