பரிசல்துறையில் குவியும் மதுபாட்டில்கள்; 'குடி'மகன்களின் கூடாரமாக மாறிய அவலம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கொளத்தூர்: பண்ணவாடி பரிசல் துறையில், 'குடி'மகன்கள் ஆங்காங்கே முகாமிட்டு மது அருந்துவதால் காலி மதுபாட்டில் குவிந்து கிடக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க, கடந்த, 20ல் மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது. இதனால், வெளியிடங்களில் இருந்து, மேட்டூருக்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணியர், அங்கிருந்து, 20 கி.மீ., தூரமுள்ள பண்ணவாடி பரிசல் துறைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால்,

கொளத்தூர்: பண்ணவாடி பரிசல் துறையில், 'குடி'மகன்கள் ஆங்காங்கே முகாமிட்டு மது அருந்துவதால் காலி மதுபாட்டில் குவிந்து கிடக்கின்றன. கொரோனா பரவலை தடுக்க, கடந்த, 20ல் மேட்டூர் அணை பூங்கா மூடப்பட்டது. இதனால், வெளியிடங்களில் இருந்து, மேட்டூருக்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் பயணியர், அங்கிருந்து, 20 கி.மீ., தூரமுள்ள பண்ணவாடி பரிசல் துறைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால், பரிசல் துறை அருகே, மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், ஆங்காங்கே மறைவான இடங்களில் குடிமகன்கள் கூட்டம், கூட்டமாக அமர்ந்து மது அருந்தி விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். அப்படி வீசப்படும் பாட்டில்கள், குவியல், குவியலாக கிடக்கின்றன. இது, சுற்றுலா வரும் பயணியரை முகம் சுளிக்க வைக்கும் என்பதால், பரிசல்துறையில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X