மருத்துவ கழிவுக்கு தீ வைப்பால் ஆபத்து

Added : மே 05, 2021
Share
Advertisement
தலைவாசல்: மருத்துவ கழிவை எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டாரங்களில், மருத்துவமனை, சிறு கிளினிக் உள்ளிட்டவை அதிகளவில் செயல்படுகின்றன. மருத்துவமனைகளில் உள்ள காலாவதி மாத்திரைகள், மருந்துகள், பயன்படுத்தப்பட்ட சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ கழிவு, வெட்ட வெளியில் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, தலைவாசல் பஸ் ஸ்டாண்ட்

தலைவாசல்: மருத்துவ கழிவை எரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. தலைவாசல், வீரகனூர் சுற்றுவட்டாரங்களில், மருத்துவமனை, சிறு கிளினிக் உள்ளிட்டவை அதிகளவில் செயல்படுகின்றன. மருத்துவமனைகளில் உள்ள காலாவதி மாத்திரைகள், மருந்துகள், பயன்படுத்தப்பட்ட சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ கழிவு, வெட்ட வெளியில் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ஏரி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ் சாலையோரம், மணிவிழுந்தான் பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் மருத்துவ கழிவு கொட்டப்படுவதோடு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் எழும் நெடியுடன் கூடிய புகையால், மக்கள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி சிரமப்படுகின்றனர். ஏரிகளில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளின் கால்களை, ஊசிகள், கண்ணாடி பாட்டில்கள் பதம்பார்க்கின்றன. மருந்து கழிவுகள், மண்ணில் கலந்தும், புகை காற்றில் பரவியும் வருவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X