பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு ஆர்.டி., - பி.சி.ஆர்., தேவையில்லை: ஐ.சி.எம்.ஆர்.,

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் சூழலில், மாநிலங்களுக்கு கொரோனா சோதனை குறித்த புதிய அறிவுறுத்தலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில் தற்போது, ஆர்.டி., - பி.சி.ஆர்., ட்ரூநேட், சி.பி.என்.ஏ.டி., உட்பட மொத்தம் 2,506 மூலக்கூறு

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக வீசி வரும் சூழலில், மாநிலங்களுக்கு கொரோனா சோதனை குறித்த புதிய அறிவுறுத்தலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்டுள்ளது.


latest tamil news



இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் தற்போது, ஆர்.டி., - பி.சி.ஆர்., ட்ரூநேட், சி.பி.என்.ஏ.டி., உட்பட மொத்தம் 2,506 மூலக்கூறு சோதனை ஆய்வகங்கள் உள்ளன. அவை தற்போது மூன்று ஷிப்ட்களாக 24 மணி நேரமும் செயல்படுவதால், ஒரு நாளைய தேசிய சோதனை திறன் 15 லட்சங்களுக்கு அருகில் உள்ளது. ஆனால், அசாதாரண அளவிலான வழக்குகள் வருவதாலும், கொரோனாவால் ஊழியர்கள் பாதிக்கப்படுவதாலும் எதிர்பார்க்கப்படும் சோதனை இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


latest tamil news



மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற பல மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களுக்குள் வரும் பயணிகளுக்கு, 'ஆர்.டி., - பி.சி.ஆர்., (rapid antigen test or RT-PCR) சோதனை நெகடிவாக இருக்க வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றன. ஆய்வகங்களின் சுமைகளை குறைக்க ஆரோக்கியமான தனிநபர்களுக்கு ஆர்.டி., - பி.சி.ஆர்., பரிசோதனை தேவையில்லை.



latest tamil news



துரித ஆன்டிஜென் சோதனை அல்லது ஆர்.டி., - பி.சி.ஆர்., மூலம் ஒருமுறை பாஸிடிவ் என, பரிசோதிக்கப்பட்ட எந்தவொரு நபரிடமும் மீண்டும் அந்த சோதனை செய்யப்படக்கூடாது. அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் ஆர்.ஏ.டி., டெஸ்ட்டை பயன்படுத்தலாம்.
இவ்வாறு ஐ.சி.எம்.ஆர்., தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jothivasu Nathamuni - Bangalore,இந்தியா
05-மே-202118:21:49 IST Report Abuse
Jothivasu Nathamuni நல்ல செய்தி
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ஒண்ணுமே புரியலே.... உலகத்திலே... என்னமோ நடக்குது.... மர்மமாய் இருக்குது... ஒண்ணுமே புரியலே.... உலகத்திலே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X