நந்திகிராமில் தோற்ற மம்தா முதல்வராகும் தகுதியை இழந்துவிட்டார்: திரபுரா முதல்வர் கடும் தாக்கு

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
அகர்தலா: 'நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா, முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார்' என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213

அகர்தலா: 'நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா, முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார்' என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார்.



latest tamil news



மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், 212 இடங்களில் வென்றது. ஆட்சி அமைக்க 148 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தாலே போதுமானது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமரவுள்ளது. தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கடும் போட்டியளித்த பா.ஜ.க., 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.


latest tamil news



முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போது, மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க., தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் பா.ஜ., தொண்டர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து, திரிபுரா மாநிலம் அகர்தலாவில் முதல்வர் பிப்லப் தேவ் குமார் தலைமையில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:



latest tamil news



மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜியே பொறுப்பேற்க வேண்டும். மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
06-மே-202101:01:13 IST Report Abuse
John Shiva   U.K இவர்களால் தான் நாடு கீழ் நோக்கி போகுது.இவர் உத்தரப்பிரதேசத்தைப்பற்றி கதைத்தால் நல்லது.உனது மாநிலம்பற்றி பேசு.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
05-மே-202120:37:10 IST Report Abuse
Endrum Indian அம்பேத்கர் முஸ்லீம் நேரு தான் இந்த எல்லா கோளாறுகளுக்கும் காரணம் ????இந்திய கான்ஸ்டிடூஷன் கோளாறு
Rate this:
Cancel
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
05-மே-202119:47:38 IST Report Abuse
திராவிஷ கிருமி மமதை ஆணவமே உருவானவள்... பதவிக்காக என்னென்ன வேண்டுமானாலும் செய்வாள்... கோடிக்கணக்கான தப்ளிக் ரவுடிகளை, குண்டர்களை பணம் கொடுத்து அடிமைகளாக வைத்திருக்கிறாள்... மமதையிடம் நியாயம் தர்மமெல்லாம் எதிர்பார்க்க முடியாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X