3வது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (32+ 37)
Share
Advertisement
கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்றார்.மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது.
WestBengal, MamataBanerjee, TakesOath, CM, மேற்குவங்கம், முதல்வர், மம்தா பானர்ஜி, பதவியேற்பு

கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்றார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., 213 இடங்களில் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.


latest tamil news



தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக பதவியேற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால் மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை.
பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் அவர் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இன்று (மே 5) காலை 10:45 மணிக்கு மம்தா, கவர்னர் ஜகதீப் தங்கர் முன்னிலையில் பதவியேற்றார். ‛மூன்றாவது முறையாக பதவியேற்ற மம்தாவை வாழ்த்துவதாக' கவர்னர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32+ 37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
05-மே-202120:17:10 IST Report Abuse
sankar இறைவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
05-மே-202120:16:08 IST Report Abuse
sankar ஜனநாயகத்துக்கே கேவலம்
Rate this:
Cancel
nan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-மே-202120:10:46 IST Report Abuse
nan மோடி ஊர் ஊராக சுற்றியதால் தான் உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன .. மக்கள் , அரசியல் வாதிகள் மாஸ்க் போடாமல் ஊர் சுற்றியது போதும்.நட்புறவை வளர்த்ததால் தான் இது சாத்தியமாயிற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X