இறந்த கணவரை ஆம்புலன்சுக்கு பணம் இல்லாமல் ரிக் ஷாவில் கொண்டு சென்ற மனைவி

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால் ரிக் ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனால், உத்தர பிரதேசம் மாநிலத்தில் படுக்கை
UP, CovidDeath, Rickshaw, கொரோனா, கணவர், ரிக்ஷா, பலி, தந்தை, தண்ணீர், உத்தரபிரதேசம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல பணம் இல்லாததால் ரிக் ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஆனால், உத்தர பிரதேசம் மாநிலத்தில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதற்கு காங்., பொதுச்செயலர் பிரியங்கா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ஆக்சிஜன், படுக்கைக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில் அதை மறைக்க பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.


latest tamil news


இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 3) பெண் ஒருவர் உ.பி.,யில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவரின் உடலை ரிக் ஷாவில் கொண்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து இறந்தவரின் மகன் கூறுகையில், ‛கொரோனா பாதித்த தந்தைக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனையில் படுக்கை இல்லை. இதனையடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இறந்த உடலை ஆம்புலன்சில் கொண்டு செல்ல அதிகளவு பணம் கேட்டனர். அந்த அளவிற்கு பணம் இல்லாததால், ரிக் ஷாவில் அழைத்து சென்றோம்,' எனக் கூறினார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


latest tamil news



இதேபோன்று, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் பணியாற்றி வந்த 50 வயதான முதியவர், கொரோனா உறுதியானதை அடுத்து ஸ்ரீகாகுளம் என்னும் தன் சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார். ஆனால், மக்கள் அவரை ஊருக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ஊருக்கு வெளியே ஒரு குடிசையில் தங்க வைக்கப்பட்டார். குடிசைக்கு வெளியே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவரது 17 வயது மகள் தண்ணீர் பாட்டிலுடன் தந்தைக்கு உதவ முயன்றார். இதனை அருகில் இருந்த தாய் தடுக்கவே, அப்பெண் கதறி அழுகிறார். பின்னர், தாயின் பிடியில் இருந்து நழுவி தந்தைக்கு தண்ணீர் கொடுத்த மகள் மீண்டும் கதறி அழுதார்.

இதனை அருகில் இருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். கொரோனா பாதித்த தந்தைக்கு உதவ முடியவில்லை என மகளும், மனைவியும் கதறி அழுவது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அதே குடிசையில் மூவரும் தனிமைப்படுத்தி வசித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202110:06:44 IST Report Abuse
suresh sridharan எல்லாம் தெரிந்த மேதாவியாக காட்டிக் கொள்ளாதீர்கள்
Rate this:
Cancel
06-மே-202110:06:42 IST Report Abuse
suresh sridharan குரோனோ பாதித்த வரை முழுமையாக அடைத்து தான் தருவார்கள் இது சாதாரண மரணம் இந்த அறிவு இல்லாத ஜீவிகள்
Rate this:
Cancel
06-மே-202110:06:39 IST Report Abuse
suresh sridharan இது சாதாரண மரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X