பொது செய்தி

இந்தியா

உருமாற்றமடைந்த கொரோனா குறித்து மார்ச் மாதமே எச்சரித்தோம்: விஞ்ஞானிகள் வேதனை

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதத்திலேயே மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 34 லட்சத்துக்கு

புதுடில்லி: உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் குறித்து மார்ச் மாதத்திலேயே மத்திய அரசுக்கு எச்சரிக்கை கொடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர். தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மூலக்கூறு உயிரியல் மையத்தின் இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:latest tamil news


நாங்கள் கொரோனா பரவல் குறித்து முன்னரே குரல் எழுப்பினோம். நாம் ஆபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதற்கு அது ஓர் எச்சரிக்கையாக இருந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அத்தகவல் பிரதமர் மோடியிடம் சென்றடைவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அதிகப்படியான தொற்று பரவல் வைரஸ் உருமாற்றத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

ராய்ட்டர்ஸில் இது குறித்து செய்தி வெளியானது. ஆனால் இந்திய ஊடகங்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இந்தியவில் தொற்று மற்றும் பலி எண்ணிகை அதிகரிக்கும் என்று நாங்கள் முன்னரே மத்திய அரசை எச்சரித்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
06-மே-202107:24:58 IST Report Abuse
rajan மோடியைவிட இவர்கள் பெரிய விஞ்ஞானிகளா - மேகத்துக்குள் மறைந்து விமானத்தை ஒட்டி ராடார் கண்களுக்கு தப்பும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானி மோடி ஒருவரே
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-மே-202107:07:20 IST Report Abuse
naadodi Modi government should have anticipated the drastic nature of the pandemic if not listened to these scientists. They should have administered the vaccines to the mass before exporting them out. Just for comparison, President Biden took the initiative and ensured the vaccine distribution. Nearly 1.5 to 2.0 million per day were administered. As a consequence, more than 40% of folks over 18 years of age got vaccinated and infection rates plummeted. That level of task force is visibly absent at India.
Rate this:
Cancel
Ayappan - chennai,இந்தியா
05-மே-202120:44:54 IST Report Abuse
Ayappan காரோண உச்சம் அடைந்தது ஏப்ரல் மாதம் ..... இவர்கள் சொன்னது மார்ச் மாதம் . என்ன முன் யோசனை ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X