அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஓட்டு சதவீதம் அதிகமா.. குறைவா?

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 37.7 சதவீத ஓட்டுகளுடன், 133 இடங்களில் - தி.மு.க., சின்னத்தில் போட்டி சேர்த்து - வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 1996ல் இருந்து கணக்கிட்டால், தி.மு.க., வின் இரண்டாவது குறைந்த ஓட்டு சதவீதம் இது.* 1996ல் அ.தி.மு.க., எதிர்ப்பு அலை வீச, தி.மு.க., அதிகபட்சமாக, 42.1 சதவீத ஓட்டுகளுடன், 173 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.* 2006ல், 26.5 சதவீத ஓட்டுகளுடன், 96 இடங்களில் வென்று,
TamilnaduElections2021, DMK, VoteShare, Percentage, தமிழகம், தேர்தல், திமுக, ஓட்டு சதவீதம்

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., 37.7 சதவீத ஓட்டுகளுடன், 133 இடங்களில் - தி.மு.க., சின்னத்தில் போட்டி சேர்த்து - வென்று ஆட்சியை பிடித்துள்ளது. 1996ல் இருந்து கணக்கிட்டால், தி.மு.க., வின் இரண்டாவது குறைந்த ஓட்டு சதவீதம் இது.
* 1996ல் அ.தி.மு.க., எதிர்ப்பு அலை வீச, தி.மு.க., அதிகபட்சமாக, 42.1 சதவீத ஓட்டுகளுடன், 173 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
* 2006ல், 26.5 சதவீத ஓட்டுகளுடன், 96 இடங்களில் வென்று, 'மைனாரிட்டி' ஆட்சி அமைத்தது. இதுவே, முதலாவது குறைந்த ஓட்டு சதவீதம்.
* 2016ல், 31.39 சதவீத ஓட்டுகளுடன், 89 இடங்கள் பெற்றது.
* 2019 லோக்சபா தேர்தலில், 32 சதவீதமாக இருந்த தி.மு.க., ஓட்டு சதவீதம், 2021, சட்டசபை தேர்தலில், 5 சதவீதம் அதிகரித்து, 37.7 ஆக உள்ளது. இதற்கு காங்., கட்சிக்கு குறைவாக, 25 தொகுதிகள் ஒதுக்கியதே காரணம். 2019, லோக்சபா தேர்தல் - 12.5 சதவீதம் - உடன் ஒப்பிடுகையில், காங்., ஓட்டு இம்முறை, 5 சதவீதம் குறைந்துள்ளது. தி.மு.க., 173 தொகுதிகளில் போட்டியிட்டதன் மூலம் காங்., ஓட்டு வங்கியின் ஒரு பகுதியை தன்வசமாக்கியது.


latest tamil news



அ.தி.மு.க., எப்படி?


*அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, 2001ல் மிக குறைவாக, 31.4 சதவீத ஓட்டுகளுடன், 132 இடங்களில் வென்று, ஆட்சியை பிடித்தது.* 2011ல் 38.4 சதவீத ஓட்டுகளுடன், 150 இடங்களில் வென்று, ஆட்சியை கைப்பற்றியது.
* 2016ல், 40.8 சதவீத ஓட்டுகளுடன், 136 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.
* 2019 லோக்சபா தேர்தலில், 18 சதவீத ஓட்டு தான் பெற்றது. இதை, 2021 சட்டசபை தேர்தலில், 34.24 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கு பா.ம.க.,வுக்கு குறைவாக, 23 தொகுதிகள் ஒதுக்கியதே காரணம். இதன் மூலம் பா.ம.க., வின், 2 சதவீத ஓட்டுகள் அ.தி.மு.க., வசம் சென்றன. 2016 சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில், சுமார் 7 சதவீதம் குறைவு.


latest tamil news



கூட்டணி பாடம்


தி.மு.க., - அ.தி.மு.க., தங்களது கூட்டணி கட்சிகளுக்கு முன்பு அதிக சீட்களை வழங்கின. 2006ல் காங்., - பா.ம.க.,வுக்கு அதிக சீட்களை கொடுத்து, 130 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டது. இதில், 96ல் மட்டும் வெல்ல, 'மைனாரிட்டி அரசு' என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல, 2001ல் அ.தி.மு.க., தன் கூட்டணி கட்சிகளான காங்., - த.மா.கா., - பா.ம.க.,வுக்கு, 94 இடங்களை ஒதுக்கீடு செய்தது. 140 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
இருப்பினும் பலமான கூட்டணி அமைந்ததால், 130 இடங்களில் வென்று, தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது. இம்முறை, இரு கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் கறாராக இருந்தன. தி.மு.க.,வின் சரியான கூட்டணி வியூகம், ஆட்சியை பிடிக்க உதவியது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - kottambatti,இந்தியா
05-மே-202119:31:36 IST Report Abuse
Raman அடுத்த ஐந்து வருஷம் இந்த ஆராய்ச்சியே செஞ்சிகிட்டு இருங்க ஹா ஹா ஹா
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
05-மே-202119:13:40 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. மாநில உரிமைகள் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, மே,வ ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா. ஜ. க. வை உதிக்கும் கட்சிகள் வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும். மூவருக்கும் வாழ்த்துகள்.கல்வி, சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மத்திய அரசின் மாநில நலனுக்கு முரணான திட்டங்களுக்கு இவர்கள் இணைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று நம்புவோம். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த அனைத்து முதல்வர்களும் (ஓ பி எஸ் & ஈ பி எஸ்) மாநில நலனில் கட்சி வேறுபாடின்றி தமிழக உரிமைகளுக்கு குரல் எழுப்பியுள்ளனர். புதிய முதல்வர் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தமிழக உரிமைகளை காக்க வேண்டும். குறிப்பாக மாநில வேலை வாய்ப்புகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் திருத்தப்பட்ட சட்டங்களை களைய வேண்டும். திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
06-மே-202108:26:24 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுமுதல்ல தமிழை உருப்படியா எழுத கத்துக்க...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
05-மே-202118:32:05 IST Report Abuse
bal முதலில் துட்டு ஆரம்பித்தது தமிழ் நாட்டின் தலைவிதி நிர்ணயிக்க..பின்னர் பிரியாணி மற்றும் குவாட்டர்..இப்போது பொய்யில் நம்பிக்கை...நல்ல முன்னேற்றம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X