பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பீதியால் வெறிச்சோடிய வாரச்சந்தை

Added : மே 05, 2021
Share
Advertisement
நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டத்தில், பரபரப்பாக இயங்கும் நல்லம்பள்ளி வாரச்சந்தை கொரோனா பீதியால் நேற்று வெறிச்சோடியது.தர்மபுரி மாவட்டத்தில், முக்கிய வாரச்சந்தைகளில் ஒன்றாக, நல்லம்பள்ளி வாரச்சந்தை உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு நடக்கும் சந்தையில், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆடு,

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டத்தில், பரபரப்பாக இயங்கும் நல்லம்பள்ளி வாரச்சந்தை கொரோனா பீதியால் நேற்று வெறிச்சோடியது.
தர்மபுரி மாவட்டத்தில், முக்கிய வாரச்சந்தைகளில் ஒன்றாக, நல்லம்பள்ளி வாரச்சந்தை உள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு நடக்கும் சந்தையில், தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி, அருகே உள்ள சேலம், கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், தர்மபுரி மாவட்டதிலும், கொரோனா எண்ணிக்கை நேற்று முன்தினம், 10 ஆயிரத்தை தாண்டியது. இதனால், நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று குறைந்தளவே ஆடு, மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதை வாங்கவும், பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால், விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்பாலான ஆடு, மாடுகள், திரும்ப கொண்டு செல்லப்பட்டன. மேலும் இங்கு, 100க்கும் மேற்பட்ட காய்கறி, மிளகாய், பருப்பு, உளுந்து உள்ளிட்ட உணவு பொருட்கள், விவசாய உபகரணங்கள் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இருந்தும் சந்தைக்கு வர, பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், நல்லம்பள்ளி வாரச்சந்தை நேற்று பொதுமக்களின்றி வெறிச்சோடியது. இதேபோன்று, நேற்று நடந்த காரிமங்கலம் வாரச்சந்தைக்கும் மாடு, தேங்காய் மற்றும் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குறைந்தளவே வந்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X