பொது செய்தி

தமிழ்நாடு

அரூரில் அ.தி.மு.க., ஹாட்ரிக் வெற்றி

Added : மே 05, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் தொகுதியில் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., வெற்றி பெற்று, தன் கோட்டையாக மாற்றியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர்(தனி) தொகுதியில், கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் முருகன், தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 11 ஆயிரத்து, 421 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பின், 2019 இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வின் சம்பத்குமார், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட

அரூர்: அரூர் தொகுதியில் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, அ.தி.மு.க., வெற்றி பெற்று, தன் கோட்டையாக மாற்றியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர்(தனி) தொகுதியில், கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் முருகன், தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனை விட, 11 ஆயிரத்து, 421 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பின், 2019 இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வின் சம்பத்குமார், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணகுமாரை விட, 9,394 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் மீண்டும், போட்டியிட்ட சம்பத்குமார், சி.பி.எம்., வேட்பாளர் குமாரை விட, 30 ஆயிரத்து, 362 ஓட்டுக்கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, மூன்றாவது முறையாக அரூர் தொகுதியில், ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள, அ.தி.மு.க., அரூர் தொகுதியை தன் கோட்டையாக மாற்றியுள்ளது. மேலும் அரூரில், அ.தி.மு.க., நேரடியாக போட்டியிட்ட, ஐந்து முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X