பொது செய்தி

தமிழ்நாடு

தேய்பிறை அஷ்டமியில் பூஜைக்கு பின் கோவிலை பூட்டியதால் பக்தர்கள் ஏமாற்றம்

Added : மே 05, 2021
Share
Advertisement
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பூஜைகள் செய்த பின் பூட்டப்பட்டதால், தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும்,

அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியான நேற்று, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை, தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பூஜைகள் செய்த பின் பூட்டப்பட்டதால், தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.


தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில், தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு, அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின், கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு மற்றும் கோவில்களை பூட்டி வைக்க அரசு அறிவித்துள்ளதால், பூஜை முடிந்தவுடன் கோவில் பூட்டப்பட்டது. இதை அறியாத உள்ளூர் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வந்தனர். பூட்டியிருந்த கோவிலை பார்த்து ஏமாற்றமடைந்து, கோவில் முன் நின்று வணங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X