தமிழ்நாடு

சாராய கடைக்கு எஸ், டீ கடைக்கு நோ: கடும் அதிருப்தியில் சிறு வியாபாரிகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
கரூர்: டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், நாளை முதல் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்க கடந்த ஏப்., 20 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சில கட்டுபாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக, நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் மதியம், 12:00 மணி முதல் இரவு, 9:00

கரூர்: டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு, கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், நாளை முதல் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கொரோனா இரண்டாம் கட்ட பரவலை தடுக்க கடந்த ஏப்., 20 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சில கட்டுபாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக, நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் மதியம், 12:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு வியாபாரிகள் நடத்தும் டீ கடைகள் மதியம், 12:00 மணி வரை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக போதிய வருமானம் இல்லாத நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு, சிறு வியாபாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், டீக்கடைகள் நடத்தி வரும் சிறு வியாபாரிகள் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், டீக்கடைகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உணவு பார்சல் வழங்கக்கூடிய பெரிய வியாபாரிகள் நடத்தும் ஓட்டல்கள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறு வியாபாரிகள் நடத்தும், டீக்கடைகளுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு ஏமாற்றமாக உள்ளது. ஏற்கனவே உணவு பார்சல் வழங்கி வரும் பெரிய ஓட்டல்களில், டீ, காபி விற்பனை தாராளமாக செய்யப்படுகிறது. அதை, போலீசார், வருவாய் துறையினர் கண்டுகொள்ளவது இல்லை. சிறிய அளவில் டீக்கடை நடத்தும் எங்களை, கடைகளை திறக்கக் கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் நஷ்டம் ஏற்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அதிகளவில் கூட்டம் சேரும், டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல், குறைந்தளவில் வாடிக்கையாளர்கள் வரும் டீக்கடைகளை, குறிப்பிட்ட நேரம் வரை நடத்தி அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X