கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபான விற்பனையை அனுமதிப்பது ஏன்: மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
சென்னை: 'நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுபான விற்பனையை அனுமதிப்பது ஏன்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி அதனை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாஸ்மாக் மது விற்பனையில் ஓரளவு கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படுவதாக விமர்சனம்
MaduraiHC, AlcoholSale, Resistance, Court, Question, உச்சநீதிமன்றம், மதுரை கிளை, மதுபானம், ஆல்கஹால்,

சென்னை: 'நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடிய மதுபான விற்பனையை அனுமதிப்பது ஏன்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி அதனை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாஸ்மாக் மது விற்பனையில் ஓரளவு கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது. இது தொடர்பாக, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உச்சநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவில், ‛தமிழகத்தில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், கோவில்கள் மூடப்பட்டுள்ளன. கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபான கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.


latest tamil news


மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், கொரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று (மே 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன் என, கேள்வி எழுப்பினர். பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மே-202109:36:43 IST Report Abuse
Matt P இது வைச்சு தான் பொழைப்பு நடத்த முதல்வர் திட்டம் வைச்சிருந்தார். அதையும் கெடுத்த்திரும் போலிருக்கு இந்த நீதிமன்றம்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
07-மே-202109:22:21 IST Report Abuse
Matt P மதுபான விற்பனையை குறைக்கும் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் இல்லை.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
06-மே-202109:45:34 IST Report Abuse
Narayanan நீதிமன்றம் இந்த நாட்டில்தானே இருக்கிறது. அவர்களுக்கு தெரியாதா? ஐயா. தி மு க வின் முக்கியவர்களால் சாராய ஆலைகள் நடத்தப்படுகிறது. அவர்களின் வருமானம் என்னாவது ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X