சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை

Updated : மே 06, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (134)
Share
Advertisement
நாகை: சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.,வினர் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த 'அம்மா உணவகத்தில்' நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம்
AmmaMiniClinic, Nagapattinam, DMK, அம்மா, மினி கிளினிக், சேதம், நாகை

நாகை: சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.,வினர் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த 'அம்மா உணவகத்தில்' நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் சென்று, உணவகத்தில் சமைக்க வைத்திருந்த பொருட்களை துாக்கி வீசினர். மேலும், வெளியே வைத்திருந்த அம்மா உணவகம் என்ற பலகையை கிழித்து எறிந்து, போட்டோவை வீசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அம்மா உணவகத்தை சூறையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கவும், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பெயர் பலகை, பொருட்களை சீரமைக்கவும், திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.


latest tamil news



ஏழை எளியோருக்காக துவங்கப்பட்ட அதிமுக.,வின் ‛அம்மா உணவகத்தை' திமுக.,வினர் சூறையாடிய நிகழ்வுகள் நடைபெற்று ஒருநாள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக நாகையில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நாகை மாவட்டம் அவரிக்காட்டில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‛அம்மா மினி கிளினிக்' கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக.,வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
06-மே-202113:39:12 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam இதற்காக வாளித்தவர்கள் பெருமை பட்டுக்கொள்ளலாம். அடுத்து ஆட்சிக்கு வந்து அரை மணீயில் காவல் துரை அதிகாரி ஒருவர் கவனிக்க படுவார், மணல் கோள்ளை ரிப்பன் வெட்டி துவக்கப்படும் .. சென்னையில் பல ரோடு ஊரக்கடைகள் அகற்றப்பட்டு கப சுர நீர் வழங்க்கப்படுகிறது விரைவில் அங்கும் பட்டாவுக்கு கட்சினர் உரிமை கோருவர் . பழைய வியாபாரிகள் நிலை...???
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
06-மே-202110:46:51 IST Report Abuse
S.Baliah Seer எதுவாய் இருந்தாலும் அரசு பெயர்களிலேயே போர்டு இருக்க வேண்டும்.
Rate this:
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
06-மே-202113:41:58 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamசமாதிக்கே அரசு நிலம் தேடும் அசியல் கட்சிகளிடம் மாற்றம் எப்படி எதிர்பார்க்க முடியும் ....
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
06-மே-202109:51:50 IST Report Abuse
kosu moolai குடிகாரர்களை மது பிரியர்கள் என்று பெயர் மாற்றியதை போல், ரவுடிகள் பெயரை மர்ம நபர்கள் என பெயர் சூட்டி மகிழும் ஊடகங்களே, மர்ம நபர்களை பிடிக்க மர்ம போலீஸ் படையை உருவாக்க ஊடகங்கள் மூலம் புதிய அரசுக்கு அன்பால் அடிபணிந்து எடுத்து சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X