பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு தடை

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: நாளை முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது.தமிழகத்தில் 6ம் தேதி முதல் மளிகைகடை ,மருந்தகம், உணவகம் தவிர வேறு கடைகள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் மக்களின் நடமாட்டம், கூட்டம் வருவதை கட்டுப்படுத்தும் விதமாக புறநகர் பகுதிகளுக்கு செல்லும்

சென்னை: நாளை முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. புறநகர் ரயில்களில் பொது மக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது.latest tamil newsதமிழகத்தில் 6ம் தேதி முதல் மளிகைகடை ,மருந்தகம், உணவகம் தவிர வேறு கடைகள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மக்களின் நடமாட்டம், கூட்டம் வருவதை கட்டுப்படுத்தும் விதமாக புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க கூடாது என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;


latest tamil newsபுறநகர் ரயில்களில் மத்திய , மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் , ஊடகத்துறையினர், முன்களப்பணியாளர்கள் ,வக்கீல்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது. இது வரும் 20 ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது போல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகத்திற்கு பணிக்கு வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
06-மே-202110:33:07 IST Report Abuse
தமிழ்வேள் அரசின் ஆகப்பெரிய மதியற்ற வேலை இது ...நேரடியாக லாக் டவுன் என்று சொல்லாமல் பொது போக்குவரத்தை கட்டுப்படுத்தினால் கொரோனா ஓடிவிடும் என்று நினைக்கிறார்கல் போல......சாலையில் டூ வீலர்கள் கார்கள் கூட்டம் பெருத்து விட்டது ....ஏகப்பட்ட டூ வீலர்களால் நெரிசல் ..அவற்றால் கொரோனா பரவாதா? அரசு குரூப் 1 அலுவலர்களை அவசியம் அலுவலகம் வரவேண்டும் என்று சொன்னதை போல எந்த தனியாரும் தங்களுடைய லீடிங் ஆபீசர்களை வர சொல்லவில்லை ..அப்படி சொல்லாத காரணத்தால் அவர்கள் வீட்டில் சுகமாக அமர்ந்துகொண்டு அடுத்தவனை டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள் ....ஆனால் ஓடாத காருக்கு பெட்ரோல் பில் மட்டும் மும்முரமாக கிளைம் ஆகிறது ..இதையெல்லாம் எவன் கேட்பது ? தனியார் கம்பெனி ஆபீசர் பதவி என்பதே ஒரு கிரிமினல் வேஸ்ட்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-மே-202106:36:29 IST Report Abuse
Natarajan Ramanathan சும்மாவே வக்கீல்கள் ஒருத்தனும் டிக்கட் வாங்க மாட்டானுங்க. இதுல சலுகைவேறா
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
05-மே-202120:11:37 IST Report Abuse
Rengaraj எத்தனை பேருந்து விட்டாலும், எத்தனை ரயில் விட்டாலும் எத்தனை ஆட்டோ ஓடினாலும் மக்கள் அதில் பயணித்து கொண்டுதான் இருப்பார்கள். நிறுத்த முடியாது. ஆனால் கொரோனா இருக்கே மக்கள் அதிகம் கூடினால் என்ன செய்வது ?முழு ஊரடங்குக்கு பதிலாக இந்த மாதிரி செய்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி பண்ண வேண்டி இருக்கிறது. அதற்காக மக்கள் அதை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு கொரோனாவை பரப்ப கூடாதல்லவா ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X