பொது செய்தி

இந்தியா

கொரோனா 3ம் அலை வரும் - முழு ஊரடங்கு தேவை: எய்ம்ஸ் இயக்குனர் வலியுறுத்தல்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: 'இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அதிதீவிரத்துடன் வீசவுள்ளதால் குறைந்தது இரு வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம்' என, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால்

புதுடில்லி: 'இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை அதிதீவிரத்துடன் வீசவுள்ளதால் குறைந்தது இரு வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம்' என, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.



latest tamil news



இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலை பரவ வாய்ப்புள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவ இயக்குனர் ரந்தீப் குலேரியா எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news




இந்தியா மிக விரைவில் கொரோனா பெருந்தொற்றின் 3ம் அலையை சந்திக்கவுள்ளது. அதனால் குறைந்தது இரு வராங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அவசியம். மருத்துவமனைகளை அதிகரித்தல், போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல், மருத்துவமனைகளில் சிகிக்சை முறையை மாற்றுதல் ஆகியவற்றின் மூலமாக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். கொரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவதன் மூலமும், கடுமையான ஊரங்கினை அமல் படுத்துவதன் மூலமும் கொரோனா சங்கிலியை நம்மால் உடைக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

இது போல் மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் கொரோனா 3 ம் அலை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. 3வது அலையை சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-மே-202116:52:49 IST Report Abuse
Malick Raja தொடர் அலைகள் இருப்பதாகவே தெரிகிறது .இல்லையா அய்யா ..
Rate this:
Cancel
06-மே-202100:01:56 IST Report Abuse
valiyavan இவன் ஒரு இளுமினடி கைக்கூலி, இது இவனது வேலை, ஆனால் இவருக்கே தெரியாது இவர் ஒரு கைக்கூலி என்று.
Rate this:
Cancel
சரவணன் - Madurai,இந்தியா
05-மே-202120:29:16 IST Report Abuse
சரவணன் மூன்று மாதங்களுக்கு முழு ஊரடங்கு தேவை. இந்த முறை வைரஸ் குறைந்த வயதுடையவர்களை தாக்கிக் கொண்டுள்ளது, பலரை வீழ்த்தியும் கொண்டுள்ளது. இதில் சிறுவர் / சிறுமிகளும் அடங்குவர். மூன்றாம் அலை வருவதற்குள் சுதாரித்துக்கொள்வதே நல்லது. மூன்று மாதங்களுக்கு முழு ஊரடங்கு மிக அவசியம். சென்ற முறை ஊரடங்கே மக்களை காத்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X