அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க 'வார்ரூம்' திறக்க வேண்டும்: ஸ்டாலின்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க அவசரமாக ‛கட்டளை மையம்' (War Room) ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என தலைமை செயலரிடம் அறிவுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை (மே 6) முதல் பல கட்டுப்பாடுகளும்
DMK, Stalin, WarRoom, CovidCrisis, திமுக, ஸ்டாலின், வார் ரூம், கொரோனா, பாதிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க அவசரமாக ‛கட்டளை மையம்' (War Room) ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என தலைமை செயலரிடம் அறிவுறுத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாளை (மே 6) முதல் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.


latest tamil newsஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். ‛மருத்துவ அவசர நிலை' என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால் அவசரமாக ‛கட்டளை மையம்' (War Room) ஒன்றை உடனடியாக திறக்க வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
06-மே-202111:11:47 IST Report Abuse
மன்னிப்பு அப்படியே அந்த சாராய கடைகளையும், தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் மூட உத்தரவு போடுங்கள் ஐயா. கல்லூரி ,பள்ளி படிக்கும் மணவர்களை விட்டிலேயே இருக்க உத்தரவு போடவேண்டும்.மக்கள் மிக கவனமுடன் இருக்கவேண்டிய காலம் இது.மிக இக்கட்டான சூழ்நிலையை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
06-மே-202109:00:24 IST Report Abuse
S Bala ஆயிரம் கோடி செலவில் புதிய "வார் ரூம்" கட்டாமல் இருந்தால் சரி. உபயோகமற்று கிடக்கும் அந்த நூலகத்தையோ, கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டையோ கூட உபயோகப்படுத்தலாம். இல்லாவிட்டால் அறிவாலயத்தை அரசு கையகப்படுத்தி அதை உபயோகிக்கலாம். எல்லாம் மக்கள் பணத்தில் கட்டியவைதானே..
Rate this:
06-மே-202110:35:47 IST Report Abuse
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ஒய் எம் சி எ மைதானத்தில் செட்டிங்ஸ் போடுங்கப்பா... செலவு ரூபாய் ஆயிரம் கோடி... அப்புறம் தேவைப்பட்டால் உசத்திக்கலாம்.. என்ன சுடலை சரிதானே.... அப்புறம் புது சட்டசபை கட்டிடம்... ஹி ஹி ஹி......
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
06-மே-202108:54:28 IST Report Abuse
Vijayan Singapore அண்ணாமலைக்கு வோட்டளிக்காமல் இருந்ததால் பள்ளப்பட்டி முஸ்லீம் மக்கள் மீண்டும் ஒருமுறை தாங்கள் எந்த காலத்திலும் இந்தியர்கள் மற்றும் சமூக நீதியைவிட முஸ்லீம் என்கிற மதத்திற்குத்தான் முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார்கள் மேலும் ஒரு ஜனநாயகக்கொலை செய்து விட்டார்கள், பார்ப்போம் திமுக MLA என்ன செய்யப்போகிறார் இவர்களுக்கு, அண்ணாமலை ஒரு தன்னலமற்ற இளஞர் நல்லது செய்யவேண்டி வந்தவருக்கு துரோகம் செய்த இந்த மக்கள் மிகவும் கஷ்டப்போகிறார்கள் என்பது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X