பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகள் நியமனம்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை, தமிழக அரசு அறிவித்தது.அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அறிவித்த, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள்,
புதிய கட்டுப்பாடுகள், தீவிரம் ,கட்டுப்பாடு,  அதிகாரிகள் நியமனம்

சென்னை : தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா நோய் தொற்று பரவல், தினமும் அதிகரித்தபடி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை, தமிழக அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அறிவித்த, பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், நாளை (மே.6)முதல் அமலுக்கு வருகின்றன; வரும், 20ம் தேதி வரை அமலில் இருக்கும்.


latest tamil news



இந்நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவதற்கு காவல் கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து 10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.. மே 7-ம் தேதி முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இந்த அதிகாரிகளை ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.


இவர்களின் பணி என்ன?

கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க வேண்டி, நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தீவிர பாதிப்புக்கு உள்ளனவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். கடைகள் , போக்குவரத்து உள்ளிட்டடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்காணிக்க வேண்டும்.


மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை


தொடர்ந்து வரும் 7 ம் தேதி ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அன்றைய தினமே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
06-மே-202106:35:50 IST Report Abuse
Aanandh விஷக்கிருமிகள் பரவுவதாக ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்து ஏழிலேயே எம். பக்தவச்சலம் கூறிச்சென்று ள்ளார். கொரோனா கிருமிகளின் பெயரால், இந்த பத்தாண்டு பசி கிருமிகள் வெறியோடு காத்திருக்கின்றன. அனைத்து துறைகள், நிலைகள் அளவில் கட்டிங் வசூலை கச்சிதமாக கழகக் கண்மணிகள் இந்நேரம் நிர்ண யம் செய்திருக்கும். தமிழக மக்கள் தங்கள் தலையில் தாங்களே வாரிப்போட்டுக் கொண்டதை அனுபவித்து த்தான் ஆக வேண்டும்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06-மே-202100:31:58 IST Report Abuse
raghavan உங்க ஊர்ல கொரோனாவெல்லாம் எப்படி போயிட்ருக்கு என்ற பழைய காணொளி ஞாபகத்திற்கு வருகிறது.
Rate this:
Cancel
06-மே-202100:02:50 IST Report Abuse
ஆப்பு இன்னும்.ஒரு வருஷத்துக்கு தொத்து குறையலைன்னா, போன உதவாக்கரை அரசுதான்னு காரணம்னு சொல்லிடலாம்.
Rate this:
06-மே-202112:50:44 IST Report Abuse
சொடலமுத்துஅவ்ளோ நம்பிக்கையா சுதாளின் மேல?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X