தந்தையின் சிதையில் குதித்த இளம்பெண் தீக்காயங்களுடன் மீட்பு

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பார்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த தந்தையின் சிதையில் குதித்த இளம்பெண் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர தாஸ் ஷர்தா. இவருக்கு மூன்று மகள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். தாமோதரதாஸ் ஷர்தா கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து அவரது

பார்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த தந்தையின் சிதையில் குதித்த இளம்பெண் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார்.



latest tamil news



ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர தாஸ் ஷர்தா. இவருக்கு மூன்று மகள் உள்ளனர். இவரது மனைவி ஏற்கனவே காலமாகி விட்டார். தாமோதரதாஸ் ஷர்தா கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். இதனையடுத்து அவரது இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தாமோதர தாஸின் இளைய மகள் சந்திராஷர்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள போலீசாரிடம் அனுமதிகேட்டுள்ளார். இறுதி சடங்கில் கலந்து கொண்ட சந்திரா ஷர்தா யாரும் எதிர்பாராத நிலையில் தீ மூட்டப்பட்ட தந்தையில் சிதையில் திடீரென குதித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இது குறித்து போலீசார் கூறுகையில் 70 சதவீத அளவிற்கு தீக்காயங்களுடன் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேல் சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
06-மே-202115:31:22 IST Report Abuse
pradeesh parthasarathy வறுமை .... எதிர்காலம் பற்றிய சிந்தனை .... கண்மூடித்தனமான மூட நம்பிக்கை .....
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
06-மே-202106:35:00 IST Report Abuse
N Annamalai சோகம் .வாழ பயம் அல்லது அன்பு .
Rate this:
Cancel
06-மே-202101:33:47 IST Report Abuse
ஆப்பு நன்றாக இருக்கும்போதே பெண்களுக்கு நல்லவாழ்க்கை அமைவது கடினம். இத்தனை தீக்காயங்களுடன்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X