பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் முழு முடக்கம்: வணிகர்கள் வரவேற்பு

Added : மே 05, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ''கொரோனா தொற்று பரவல் தடுப்புக்கான முழு முடக்கத்தை வரவேற்கிறோம். கட்டுப்பாடுகளை அறிவிக்கும்போது, வணிகர்களை அழைத்து, அரசு பேச வேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாடு, சென்னை கே.கே.நகரில் நேற்று நடந்தது.மாநாட்டில், நலிந்த வணிகர்கள், முடி
 தமிழகத்தில் முழு முடக்கம்: வணிகர்கள் வரவேற்பு

சென்னை: ''கொரோனா தொற்று பரவல் தடுப்புக்கான முழு முடக்கத்தை வரவேற்கிறோம். கட்டுப்பாடுகளை அறிவிக்கும்போது, வணிகர்களை அழைத்து, அரசு பேச வேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாடு, சென்னை கே.கே.நகரில் நேற்று நடந்தது.மாநாட்டில், நலிந்த வணிகர்கள், முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர்கள் உட்பட, 2,000 பேருக்கு, தலா, 25 கிலோ அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டி:நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. டில்லியில் உடல்களை எரிக்க, ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. இன்னும், 10 நாட்களில், சென்னையிலும், அதே நிலை ஏற்படும் என, சில அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அதனால், கட்டாயம் முக கவசம் அணியுங்கள்.'மருத்துவமனையில் இடமில்லை; போதிய மருத்துவர்கள் இல்லை; அதனால், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, மருத்துவர்களே, நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

கடைகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டால், கூட்டம் அதிகம் சேர்ந்து விடும். இதனால், 12:00 மணி வரை என்பதை, பிற்பகல், 3:00 மணி வரை நீட்டிக்க வேண்டும்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மத்திய - மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும். தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்றினால், பாராட்டு விழா நடத்தப்படும்.

முழு முடக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை பெற்று, வணிகர்களுக்கு இடையூறு இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.


மகனே ஆனாலும்...

விக்கிரமராஜா கூறியதாவது:என் மகன் பிரபாகர ராஜா, விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். பேரமைப்பு நிர்வாகிகளை, நான் அழைக்காமல், அவர்களாக முன்வந்து, என் மகனின் வெற்றிக்காக உழைத்தனர். என் மகன் தோற்றிருந்தால், 'விக்கிரமராஜா மகனே தோற்று விட்டார்; இவ்வளவு தான் பேரமைப்பு பலம்' எனக் கூறியிருப்பர்.

தற்போது,அவர் வெற்றி பெற்று விட்டதால்,'பேரமைப்பு பலமாக இருக்கிறது' என கூறுகின்றனர். என் மகன் வியாபாரிகளுக்கு விரோதமாக செயல்பட்டால், அவரை எதிர்ப்பதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தயாராக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suzhi - kollam,இந்தியா
08-மே-202109:23:14 IST Report Abuse
suzhi நீங்கள் எல்லாம் நல்ல நடிகர்கள்
Rate this:
Cancel
VARATHARAJ - chennai,இந்தியா
08-மே-202106:52:28 IST Report Abuse
VARATHARAJ same guys opposed lockdown during ADMK rule and threatened to commit suicide if lockdown imposed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X