சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடும் மக்கள்: கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயர்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:'ரெம்டெசிவிர்' மருந்துக்காக தவம் கிடக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். கள்ளச்சந்தையில், ஒரு குப்பி, 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நபர்களுக்கு, 'ரெம்டெசிவிர்' மருந்து அத்தியாவசிய தேவையாக உள்ளது.'இது, உயிர் காக்கும் மருந்தில்லை; அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரைக்க
 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடும் மக்கள்: கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயர்வு

சென்னை:'ரெம்டெசிவிர்' மருந்துக்காக தவம் கிடக்கும் நிலையில் மக்கள் உள்ளனர். கள்ளச்சந்தையில், ஒரு குப்பி, 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு மற்றும் ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நபர்களுக்கு, 'ரெம்டெசிவிர்' மருந்து அத்தியாவசிய தேவையாக உள்ளது.'இது, உயிர் காக்கும் மருந்தில்லை; அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரைக்க வேண்டாம்' என, அரசு சார்பில் கூறப்பட்டாலும், டாக்டர்கள் பரிந்துரைப்பது நின்றபாடில்லை.

மேலும், நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து, அவசர காலத்தில் பயனளிக்க கூடியது என்பதால், டாக்டர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இந்தியாவில் ஆறு நிறுவனங்கள், 'ரெம்டெசிவிர்' மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த மருந்துகளை, பெரும்பாலும், மத்திய, மாநில அரசுகளே நேரடியாக கொள்முதல் செய்து விடுகின்றன. அதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு, மிக குறைந்த அளவில் மருந்துகள் வருகின்றன.இதனால், தனியார் மருத்துவமனைகளில், ரெம்டெசிவிர் மருந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தங்கள் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, டாக்டர்கள், இந்த மருந்தை பரிந்துரைத்து வருகின்றனர். அவ்வாறு பரிந்துரைக்கப்படும் சீட்டுகளைக் கையில் ஏந்தி, பொது மக்கள், தெரு தெருவாக அலைந்து திரிகின்றனர். இதற்கு தீர்வு காண, தமிழக மருத்துவ பணிகள் கழகம் சார்பில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், இரண்டு மையங்களில், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விற்பனை துவங்கிய ஒன்பது நாட்களில், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குப்பிகள், 2.82 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.தினமும், 2,000க்கும் மேற்பட்டோர் மருந்து வாங்க வரும் நிலையில், முதலில் வரும், 500 பேருக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், விற்பனை துவங்கி, ஒன்பது நாட்களுக்கு மேல் ஆகியும், மருத்துவமனைகளில் கூட்டம் கூடுவது குறைந்தபாடில்லை.

மருந்து வாங்க, சென்னை மட்டுமல்லாது, பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் வரும் நிலை அறிந்தும் அரசு அல்லாட வைக்கிறது. இதனால், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பலர், இரவு, பகலாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தவம் கிடைக்கின்றனர்.நேற்று, 2:00 மணிக்குள், மருந்து காலியாகி விட்டதாக கூறி, காத்திருந்தோர் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அதில், 300க்கும் மேற்பட்டோர், வெளிமாவட்டங்களில் இருந்து வந்ததால், அங்கேயே காத்து கிடந்தனர்.

இதுபோன்று, மக்கள் தினமும் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கள்ளச்சந்தையில், ஒரு குப்பி மருந்து, 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அரசு அதிகபட்சம், 1,500 ரூபாய் என, விலை நிர்ணயித்துள்ளது. ஒரு நோயாளிக்கு, ஆறு குப்பிகள் தேவையாக இருப்பதால், கள்ளச் சந்தையில், 1.08 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. சில இடங்களில், மருந்து வாங்கி தர, தனியாக, 10 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெறப்படுகிறது.

இதுகுறித்து, வெளிமாவட்டங்களை சேர்ந்தோர் கூறியதாவது:ரெம்டெசிவிர் மருந்து வாங்க, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகிறோம். நீண்ட வரிசையில் காத்திருந்து, மருந்து வாங்க, இரண்டு நாட்கள் ஆகின்றன. மாநிலம் முழுதும், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில், சென்னைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மற்ற மாவட்ட மக்களையும், மருத்துவத் துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனைகளிலும், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X