சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'எட்டப்ப' அதிகாரிகளை எட்டி வைப்பாரா ஸ்டாலின்?

Added : மே 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
'எட்டப்ப' அதிகாரிகளை எட்டி வைப்பாரா ஸ்டாலின்?''கட்சியினர் விலை போயிட்டதால, தோத்துட்டேன்னு அழாத குறையா புலம்புதாரு வே...'' என, அன்வர்பாய் வீட்டில், அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.''எந்த தொகுதி நிலவரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தஞ்சை மாவட்டத்துல, எட்டு தொகுதியில, ஏழுல தி.மு.க., ஜெயிச்சிட்டு... ஆனா, ஒரத்தநாடு தொகுதியில மட்டும், அ.தி.மு.க.,வின்

 டீ கடை பெஞ்ச்


'எட்டப்ப' அதிகாரிகளை எட்டி வைப்பாரா ஸ்டாலின்?



''கட்சியினர் விலை போயிட்டதால, தோத்துட்டேன்னு அழாத குறையா புலம்புதாரு வே...'' என, அன்வர்பாய் வீட்டில், அரட்டையை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''எந்த தொகுதி நிலவரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தஞ்சை மாவட்டத்துல, எட்டு தொகுதியில, ஏழுல தி.மு.க., ஜெயிச்சிட்டு... ஆனா, ஒரத்தநாடு தொகுதியில மட்டும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வைத்திலிங்கம் ஜெயிச்சிட்டாரு...

''இங்க, தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் போட்டியிட்டாரு... மறுபடியும் அவரே ஜெயிப்பார்னு சொன்னாவ வே... ஆனா, வைத்திலிங்கத்தின் பணமழையில, தொகுதி நிலவரம், அவருக்கு சாதகமா மாறிட்டு...

''எல்லாத்துக்கும் மேலா, தி.மு.க.,வுக்கு வேலை பார்க்காம இருக்க, முக்கிய நிர்வாகிகளுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் வரை, வைத்திலிங்கம் கொடுத்ததும், தன் தோல்விக்கு காரணம்னு ராமச்சந்திரன் புலம்புதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.

''நாலு மாவட்ட போலீசாரும், 'ஹேப்பி'யா இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்தெந்த மாவட்டங்கள்னு விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''இ.பி.எஸ்., நாலு வருஷமா முதல்வரா இருந்தாரோல்லியோ... மாசத்துல ரெண்டு, மூணு முறை, சொந்த ஊரான சேலத்துக்கு வந்துடுவார் ஓய்...

''சில நேரம், சேலத்துக்கு விமானத்துல வருவார்... சில நேரம், கோவைக்கு விமானத்துல வந்து, கார்ல சேலம் வருவார்... போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், முதல்வரிடம் நல்ல பேர் எடுக்கணும்கறதுக்காக, வழி முழுக்க, போலீசாரை நிறுத்தி வச்சுடுவா ஓய்...

''சேலம் மட்டுமில்லாம, கோவை, திருப்பூர், ஈரோடு போலீசாரையும் முதல்வர் பாதுகாப்பு பணியில போட்டு, வெயில்லயும், மழையிலயும் படுத்தி எடுத்துண்டு இருந்தா... 'இனிமே, நமக்கு தொல்லை இல்லை'ன்னு, இந்த மாவட்ட போலீசார் எல்லாம் ஜாலியா இருக்கா ஓய்...'' என்றார்,
குப்பண்ணா.

''ஸ்டாலின் தரப்பு உஷாரா இருக்கணும் பா...'' என்றார், அன்வர்பாய்.

''யார்கிட்ட இருந்துவே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சென்னை மாநகராட்சியில, கோலோச்சிட்டு இருக்கிற தலைமை பொறியாளர் ஒருத்தர், அப்பதவிக்கே, 'பைபாஸ் ரூட்'ல தான் வந்தாரு... சீனியாரிட்டியில, ஏழாவது இடத்துல இருந்த அவர், 'மாஜி' உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை காக்கா பிடிச்சு, முதலிடத்தை பிடிச்சாரு பா...

''கொரோனா தடுப்பு நடவடிக்கையில ஈடுபடாம, 'ஒர்க் பிரம் ஹோம்'னு சொல்லிட்டு, மாநகராட்சி கான்ட்ராக்டர்களிடம், வேலுமணி பேரை சொல்லி, கடைசிகட்ட வசூல் வேட்டை நடத்தியிருக்கார்...

''இது, 'மாஜி'க்கு தெரியாதாம்... இப்ப, ஆட்சி மாறிட்டதால, தன் பதவியை தக்க வைக்க, தி.மு.க., தரப்பிடம், 'டீல்' பேசிட்டு இருக்காரு பா... இதுக்காக, 'அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிரா, ஆதாரங்களை தர தயார்'னும் பேரம் பேசுறாரு... 'இந்த மாதிரி, எட்டப்ப அதிகாரிகளை, ஸ்டாலின் தரப்பு எட்டியே வைக்கணும்'னு, மாநகராட்சி வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
ஒலித்த போனை எடுத்த அந்தோணிசாமி, ''குமார்... போன காரியம் முடிஞ்சுதாங்க...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
06-மே-202116:30:28 IST Report Abuse
r.sundaram நாளை ஆட்சி மாறினால் திமுகவின் தில்லுமுல்லுகளை ஆட்சி அமைக்கும் கட்சியிடம் கொடுத்து அதிலும் காசு பார்ப்பார். ஆதலால் இவரை உடனே விருப்ப ஓய்வு எடுக்க சொல்ல வேண்டும் ஆளும் வர்க்கம்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
06-மே-202105:57:14 IST Report Abuse
D.Ambujavalli ‘எட்டப்பர்கள் ‘ அன்று அதிமுக ஆட்சியின் ரகசியங்களை இவர்களுக்கு ‘கடத்தி ‘ சம்பாதித்தார்கள், இப்போது இங்கிருந்து ‘அங்கு’ கடத்தி காசு பார்ப்பார்கள் இவர்களுக்கு செய்தபோது இனித்ததாம், இப்போது எட்டி வைக்க முடியுமா?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
06-மே-202102:17:41 IST Report Abuse
John Miller வைத்து என்ன மக்கள் செல்வாக்கினால் ஜெயித்தார். கல்லணை கால்வாய் கட்டுமானத்தில் அடித்த கொள்ளை முதல்கொண்டு 60லிருந்து 80 கோடிகளை தொகுதிக்குள் இறக்கி தான் ஜெயித்தார். இப்போது இவரால் அதிமுக ஒரு எம்பியை பறி கொடுத்தப்போகின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X