சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் மறைவு

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் நாகபூஷணம், கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார். தமிழக சட்ட பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் நாகபூஷணம், 78. கொரோனா பாதிப்பால், வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் காலமானார்.இவர், வழக்கறிஞர் கொளத்துார் பஞ்சாட்சரத்தின் மூன்றாவது மகள். சென்னை
 சட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் மறைவு

சென்னை:தமிழக சட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் நாகபூஷணம், கொரோனா தொற்று பாதிப்பால் காலமானார்.

தமிழக சட்ட பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் நாகபூஷணம், 78. கொரோனா பாதிப்பால், வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் காலமானார்.

இவர், வழக்கறிஞர் கொளத்துார் பஞ்சாட்சரத்தின் மூன்றாவது மகள். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பும், சென்னை பல்கலையில் எம்.எல்., மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். 1977 முதல் 1988 வரை சென்னை சட்டக் கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, 1997ல் துவக்கப்பட்ட போது, அதன் முதல் துணைவேந்தராக நாகபூஷணம் நியமிக்கப்பட்டார். சட்ட பல்கலையின் சிண்டிகேட் விதிகள் மற்றும் நிர்வாக விதிகளை தயாரித்ததில் முக்கிய பங்காற்றினார். இவர், 2000ம் ஆண்டு வரை துணைவேந்தர் பதவி வகித்தார்.

நாகபூஷணம் மறைவுக்கு, சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார், பல்கலை பேராசிரியர்கள், பணியாளர்கள் இரங்கல் தெரிவித்துஉள்ளனர். பல்கலை வளாகத்தில், அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X