இதே நாளில் அன்று

Added : மே 05, 2021
Share
Advertisement
மே, 6, 1952இத்தாலியில் உள்ள மார்ச்சே எனும் இடத்தில், 1870 ஆக., 31ம் தேதி பிறந்தவர், மரியா மான்டிசோரி. அந்நாட்டிலேயே மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண், இவர் தான்.ரோம் நகரில், இவர் நடத்திய பள்ளியில், குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கினார். இதற்கு, அவரது பெயரே சூட்டப்பட்டது.இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள், சிறு வயதிலேயே விளையாட்டை விட,
இதே நாளில் அன்று


மே, 6, 1952



இத்தாலியில் உள்ள மார்ச்சே எனும் இடத்தில், 1870 ஆக., 31ம் தேதி பிறந்தவர், மரியா மான்டிசோரி. அந்நாட்டிலேயே மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண், இவர் தான்.ரோம் நகரில், இவர் நடத்திய பள்ளியில், குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க ஒரு புதிய கல்வி முறையை உருவாக்கினார். இதற்கு, அவரது பெயரே சூட்டப்பட்டது.இவரது முறையை பின்பற்றி கல்வி கற்ற குழந்தைகள், சிறு வயதிலேயே விளையாட்டை விட, வேலையில் சாதிக்க அதிக ஆர்வம் காட்டினர். இந்த கற்றல் முறையில், தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்தாலும், குழந்தைகள் அதிகம் களைப்படையாமல் இருந்தனர்.
இதையடுத்து, மான்டிசோரி கல்வி முறையை, ஐரோப்பா முழுதும் பயன்படுத்த துவக்கினர். பின், நெதர்லாந்தில் ஆசிரிய பயிற்சி பள்ளியை நிறுவினார். 1939 முதல், 1947 வரை இந்தியாவிலும், இலங்கையிலும் பணியாற்றினார். 1952 மே, 6ம் தேதி, தன், 82வது வயதில் இயற்கை எய்தினார். கல்வியாளர் மரியா மான்டிசோரி காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X