அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்முறை கலாசாரம் கூடாது தி.மு.க.,வுக்கு முருகன் அறிவுரை

Added : மே 05, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை:''தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. வன்முறை கலாசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டியது, கட்சி தலைவர்களின் தலையாய பொறுப்பு,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று, மாநிலம் முழுதும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில்
 வன்முறை கலாசாரம் கூடாது தி.மு.க.,வுக்கு முருகன் அறிவுரை

சென்னை:''தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று. வன்முறை கலாசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டியது, கட்சி தலைவர்களின் தலையாய பொறுப்பு,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில், பா.ஜ.,வினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று, மாநிலம் முழுதும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன், துணை தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச் செயலர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், முருகன் பேசியதாவது:ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அசாமில் ஆட்சியை தக்க வைத்துள்ள பா.ஜ., மேற்கு வங்கத்தில், மூன்று எம்.எல்.ஏ.,க்களில் இருந்து, 77 எம்.எல்.ஏ.,க்களை பெற்றுள்ளது.தமிழ் மண்ணில் பா.ஜ., காலுான்ற முடியாது என்றனர். தமிழ் பேசும் புதுச்சேரியில், பா.ஜ., கூட்டணி அரசு அமைய உள்ளது.

தமிழகத்தில், பா.ஜ., நுழைய முடியாது என்றனர். ஆனால், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பா.ஜ.,வின் அபரிமிதமான வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு, பா.ஜ., தொண்டர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரத்தை அரங்கேற்றி வருகிறது.அதை, இந்தியாவிற்கு எடுத்துக் காட்டுவதற்காக, தமிழகம் உட்பட, நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

மம்தா பானர்ஜிக்கு, கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். அம்மாநிலத்தில், பா.ஜ., நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.பா.ஜ., சாதாரண இயக்கம் அல்ல.தியாகத்திற்கு பெயர் பெற்றது. கேரளாவிலும், பா.ஜ., சகோதாரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில், ஆட்சி கூட அமைக்காத நிலையில், தி.மு.க.,வினரால், அம்மா உணவகம் சூறையாடப்பட்டு உள்ளது. அக்கட்சியினர், அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இன்று, ஒரு கட்சி வெற்றி பெறலாம். நாளை, நாங்கள் வெற்றி பெறலாம். ஆனால், வன்முறை கலாசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டியது, அந்த கட்சி தலைவர்களின் தலையாய பொறுப்பு.இவ்வாறு, முருகன் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandran - madurai,இந்தியா
06-மே-202119:44:15 IST Report Abuse
chandran அய்யா முருகன், நீங்க அட்மட் முதுகுல ஏறி சவாரி செஞ்சு ஜெயிச்சு இருக்கேங்க.. கால் ஊன்றுவது என்றால், நீங்கள் தனியாக நின்று ஜெயித்து காட்டி இருக்க வேண்டும். இது ADMK விற்கு கிடைத்த வெற்றி.. உங்களுக்கு கிடைத்தது இல்லை. அதை நன்றாக வைத்து கொண்டு பேசவும்.
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
07-மே-202114:42:27 IST Report Abuse
madhavan rajanஅதே போல கான்கிராஸ், கம்யூனிஸ்ட், திருமா, வைகோ போன்றவர்களுக்கும் அறிவுரை கூறவும். அது போன்ற கூட்டணி இல்லாமல் திமுக எவ்வளளவு முறை தோற்றிருக்கிறது என்று சரித்திரத்தை திருப்பிப்பாருங்கள் சந்திரன் அவர்களே. பிறரின் அழுக்கை துடைக்கும் முன் கூறும் முன் உங்கள் அழுக்கை கவனிக்கவும்....
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
06-மே-202116:13:29 IST Report Abuse
Shekar முருகன் தேடுவது, மீன் தின்னா கொக்கு, பால் குடியா பூனை, புல் தின்னும் புலி, இதெல்லாம் நடக்கிற காரியமா?
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
07-மே-202114:42:57 IST Report Abuse
madhavan rajanவன்முறை இல்லா திமுக என்பது கனவிலும் நடக்காது....
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
06-மே-202116:10:51 IST Report Abuse
Shekar ///ஸ்டாலின் பதில் சொன்னதே கிடையாது//...ஏன்னா தெரியாது, யாரும் எழுதியும் தரல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X