உச்சநீதிமன்ற தீர்ப்பு: துரதிருஷ்டவசமானது: உத்தவ்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது என முதல்வர் உத்தவ் தெரிவித்தார். 'மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினருக்கு, கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது; அதனால், சட்டம் ரத்து செய்யப்படுகிறது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன
உச்சநீதிமன்ற தீர்ப்பு  துரதிருஷ்டவசம், உத்தவ்

புதுடில்லி : மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது என முதல்வர் உத்தவ் தெரிவித்தார்.

'மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினருக்கு, கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது; அதனால், சட்டம் ரத்து செய்யப்படுகிறது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து மஹாராஷ்டிரா சிவசேனா கட்சி முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியது,


latest tamil news



உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, துரதிருஷ்டவசமானது. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான, சட்ட போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில், ஜனாதிபதியும், பிரதமரும் கருணை காட்ட வேண்டும் . மராத்தாவினருக்கு இடஒதுக்கீடு வழங்க, பார்லி.,யில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மஹாராஷ்டிர அரசு தான் காரணம்



மஹாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவர், சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான சரியான காரணங்களை கூறி, உச்ச நீதிமன்றத்தை ஏற்க வைப்பதில், மஹாராஷ்டிரா அரசு தோல்வியடைந்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சியையும் கூட்டி ஆலோசிப்பதுடன், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
07-மே-202114:34:35 IST Report Abuse
madhavan rajan உங்கள் கூட்டணி துரோக ஆட்சியே மஹாராஷ்டிரத்துக்கு துரதிருஷ்டவசமானது. அதைவிடவா?
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
06-மே-202111:48:48 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இடவொதுக்கீடு மூலமா மராத்தா சமூகத்தை வாக்கு வங்கியாக பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதிச்சி இருக்கணும்
Rate this:
Cancel
Pichai Tamizhan - Jeddah,சவுதி அரேபியா
06-மே-202111:18:39 IST Report Abuse
Pichai Tamizhan பேசாமல் 100% இட ஒதுக்கீடு கொடுத்துவிட்டு மற்ற பொது பிரிவு மக்களை நாடு கடத்திவிடலாமே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X