எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வுக்கு சுய பரிசோதனை அவசியம்

Updated : மே 06, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
'ஆட்சியை பறிகொடுத்த நிலையில், கட்சித் தலைமை, சுய பரிசோதனை செய்து கொள்வதுடன், கட்சியை வலுப்படுத்த, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் வெற்றிபெறும் என, கருத்துக் கணிப்புகள் கூறின. அவற்றை பொய்யாக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா சாதனை
ADMK, EPS, OPS, சுய பரிசோதனை, அவசியம்

'ஆட்சியை பறிகொடுத்த நிலையில், கட்சித் தலைமை, சுய பரிசோதனை செய்து கொள்வதுடன், கட்சியை வலுப்படுத்த, ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் வெற்றிபெறும் என, கருத்துக் கணிப்புகள் கூறின. அவற்றை பொய்யாக்கி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா சாதனை படைத்தார்.அவர் மறைவுக்கு பின், கட்சி பல்வேறு சோதனைகளை சந்தித்தது. எனினும், முதல்வரான இ.பி.எஸ்., அனைத்தையும் சமாளித்து, ஆட்சியை ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தார்.மூன்றாவது முறையாக, கட்சி ஆட்சிக்கு வரும் என நம்பினார். ஆனால், கட்சி தோல்வியை சந்தித்தது.


இரட்டை தலைமை


தி.மு.க., எதிர்பார்த்த அளவுக்கு, அ.தி.மு.க., தோல்வியை தழுவவில்லை. லோக்சபா தேர்தலில் புறக்கணித்த அளவுக்கு இல்லாமல், மக்கள் ஓரளவு ஆதரவு அளித்துள்ளனர். இதன் காரணமாக, இழந்த ஓட்டு வங்கியை பெற்றதுடன், கட்சி, 66 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளது. பல இடங்களில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றியை தவற விட்டுள்ளது.

கட்சித் தலைமை, தோல்விக்கான காரணத்தை ஆராய்வதுடன், தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கட்சியில் தற்போது, இரட்டை தலைமை உள்ளது. இது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஆகியோரில் யாரை சந்தோஷப்படுத்துவது; ஒருவரை சந்தித்தால், மற்றொருவர் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம், நிர்வாகிகளிடம் உள்ளது. இருவருக்கும் இடையே, அவ்வப்போது மோதல் வந்து, பின் சரியாவது, கட்சியினரிடமும், மக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், கீழ்மட்டத்தில், இரு அணிகளாகவே கட்சியினர் உள்ளனர்; அவர்களிடம் ஒற்றுமை இல்லை. இது, தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம். எனவே, இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், புதிய நபரை தேர்வு செய்ய வேண்டும்.


தடுமாற்றம்


அதேபோல், இருவரும் கட்சி தலைவராக இருக்கவில்லை. முதல்வராக இருந்த இ.பி.எஸ்., கட்சி இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலையச் செயலர், சேலம் மாவட்ட செயலர் என, அனைத்து பதவிகளையும் வைத்துக் கொண்டார்.கட்சியின் தலைமைப் பதவிக்கு வந்த பின்னும், மாவட்ட செயலர் பதவியை விட மனமில்லை.அதேபோல், ஓ.பி.எஸ்., கட்சி ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவியை வகித்து வருகிறார். மூத்த அமைச்சர்களும், பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதியை அமல்படுத்தி, மற்றவர்களுக்கு பதவியை வழங்கலாம்.

நல்ல திறமைசாலிகளை, மாற்று அணி என்ற காரணத்துக்காகவே, பயன்படுத்திக் கொள்ளவில்லை. தேர்தல் பணிக்காக, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன; அவை பெயரளவுக்கே இருந்தன. முடிவுகளை, வேலுமணி, தங்கமணி ஆகியோர் மட்டுமே எடுத்தனர். இதுவும், கட்சி நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.அமைச்சர்கள், மாநிலத்தில் கட்சியை வளர்க்க எதுவும் செய்யாமல், தங்களை வளர்த்துக் கொள்ளவும், மாவட்டத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவுமே முயற்சித்தனர்.

கட்சி தலைமை சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள், ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டால், பல இடங்களில் நடத்தப்படுவதில்லை.கட்சி தலைமையும் கண்டுகொள்வதில்லை. தலைமை அறிவிக்கும் பேச்சாளர்களை, யாரும் அழைப்பதில்லை. இதனால் கட்சி வளர்ச்சி என்பதே இல்லாமல் இருந்தது. நிர்வாகிகளை மதிக்காமல் செயல்படுவோர் மீது, கட்சியினர் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்க, கட்சி தலைமை தயங்கியது. முடிவெடுக்க முடியாமல், தலைமை தடுமாறுவது, கட்சி வளர்ச்சிக்கு உதவாது.


நடவடிக்கை


அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் அளித்த முக்கியத்துவத்தை, கட்சி நிர்வாகிகளுக்கு அளிக்கவில்லை. இது, தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம். நமக்கு வேண்டியவர் என்று பார்க்காமல், திறமையான நபர்களுக்கு பதவி கொடுத்தால், கட்சி வளரும்; வேண்டியவர்கள் என்று பார்த்தால், கட்சி அழியும். நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். தோல்விக்கான காரணங்களை கேட்டறிய வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து, கட்சி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை, மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நீடிக்க முடியும். இதை, தலைவர்கள் உணர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
07-மே-202109:59:51 IST Report Abuse
Ellamman முக்கியமான ஒரு ஆலோசனை இங்கு தெரிவிக்கப்படவில்லை... அதை இங்கு தருவார்கள் என்று நாம் எதிரிபார்க்கமுடியாது... இந்த ஒரு செயலை செய்தாலே அடிமை என்ற அவப்பெயரில் இருந்து தப்பலாம்... பீ ஜெ பீ யை அப்படியே துண்டதாக கழட்டி விடுவது.... இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வேறு எதையுமே செய்ய தேவையில்லை... இந்த ஒரு செயலை செய்தால் போதும் ... அடிமை என்ற அவப்பெயரில் இருந்து தப்பி அனா தி மு க என்ற பெயரை பெற்றுவிடலாம்... ஒன்றே ஒன்று தான்... பீ ஜல்சா பீ யையே சுத்தமாக கழட்டி விடவேண்டும்.... செய்வார்களா??? செய்வார்களா??? செய்வார்களா??
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
07-மே-202110:37:56 IST Report Abuse
Ellammanவலிமையான சுதந்திரமான எதிர்க்கட்சி ஜனநாயகத்தின் அடிநாதம்.. அந்த கடமையை அண்ணா தி மு க ஆற்ற வேண்டும் என்றால் பீசப்பி யை கழட்டி விடவேண்டும்... செய்த ஊழலுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும்...அவர்கள் மேலிருந்து ஆட்டுவிக்கும் செயலை அனுமதிக்காமல் சுதந்திரமாக அந்த கட்சியை செயல்படுத்தினால் தான் தமிழகத்திற்கு நல்லது....
Rate this:
Cancel
06-மே-202117:57:20 IST Report Abuse
ஆப்பு ஒரு பரிசோதனையும் தேவையில்லை. மக்களுக்கு இவிங்களுக்கு மேல் வாரிக் குடுத்தவங்க இல்லை. அடுத்த ஆட்சி இவிங்களதுதான். சுடலை ஆட்சி பாதியிலே காணாம போயிடும். எதுக்கெடுத்தாலும் நான் நான் என்று முன்னடி நிற்பதை இடைப்பாடி குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
06-மே-202119:49:17 IST Report Abuse
CHARUMATHITRUE ALL POOR PEOPLE ARE STILL WITH THEM THEY SD REALIZE AND SD WORK FOR THEM THOUGH NOT IN POWER AN D SHOULD NOT THIS GOVERNMENT TO FUNCTION AS THEY LIKE THEN AND THERE THEY SD UNITEDLY OPPOSE AND FIND ALL WRONG DOING OF THIS GOVERNMENT. THEY SD KEEP ON ASKING THIS GOVERNMENT POLL PROMISES...
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
06-மே-202115:36:31 IST Report Abuse
Appan அடிமைகள் சரித்திரம் படைத்ததாக சான்றுகள் இல்லை..
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
06-மே-202119:46:31 IST Report Abuse
CHARUMATHIYARU...
Rate this:
Anvardeen - chennai,இந்தியா
11-மே-202120:25:25 IST Report Abuse
Anvardeenஅலாவுதீன் கில்ஜி என்ற அடிமை அரசனாகி இந்திய வரவில்லை என்றால் 400 ஆண்டுகள் மொகலாயர்கள் ஆச்சி இந்திய வரலாற்றில் இருந்திருக்காது .. இஸ்லாம் என்று ஒன்று இருந்திருக்காது இந்தியாவில் .. பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற நாடுகள் இருந்திருக்காது ... வரலாறு முக்கியம் அமைச்சரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X