பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிதிக்கு மொய் விருந்து டீக்கடைக்காரரின் மனிதநேயம்

Added : மே 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுக்கோட்டை:டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மொய் விருந்து நடத்திய டீக்கடைக்காரரை மக்கள் பாராட்டினர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் நால்ரோடு பகுதியில் சிவகுமார், 43, என்பவர், பகவான் என்ற பெயரில் டீக்கடை வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இவரது கடையில் டீ, பலகாரம் சாப்பிட்டு வைத்த
 கொரோனா நிதிக்கு மொய் விருந்து டீக்கடைக்காரரின் மனிதநேயம்

புதுக்கோட்டை:டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, மொய் விருந்து நடத்திய டீக்கடைக்காரரை மக்கள் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வம்பன் நால்ரோடு பகுதியில் சிவகுமார், 43, என்பவர், பகவான் என்ற பெயரில் டீக்கடை வைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், இவரது கடையில் டீ, பலகாரம் சாப்பிட்டு வைத்த கடன்களை தள்ளுபடி செய்தார்.

தற்போது, டில்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிருக்காக போராடும் பொதுமக்களுக்கு உதவி செய்ய, மொய் விருந்து நடத்த திட்டமிட்டார்.இதன்படி, நேற்று தன் கடையில் டீ, பலகாரம் கொடுத்து, மொய் விருந்து நடத்தினார். விவசாயிகள், மக்கள், சிறுவர்கள் என பலர், டீ, பலகாரம் சாப்பிட்டு, 10 முதல், 200 ரூபாய் வரை, கடை முன் வைத்திருந்த கொரோனா நிதி பாத்திரத்தில், பணத்தை செலுத்தினர்.

சிவகுமார் கூறுகையில், ''இதில் சேர்ந்த பணத்தை, நாளை கலெக்டரிடம் வழங்கி, டில்லி மற்றும் வட மாநிலங்களில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்ப உள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
06-மே-202116:23:47 IST Report Abuse
r.sundaram வறுத்து தெரிந்த வழியில் உதவுகிறார். மத்திய அரசின் செயல்பாடுகளை குற்றம் குறை கூறி செயல்படாமல் செய்வதை விட இது மேல்.
Rate this:
Cancel
S.K. Praba - Madurai,இந்தியா
06-மே-202115:01:03 IST Report Abuse
S.K. Praba இந்த கலிகாலத்தில், இப்படி பட்ட நல்ல நல்ல நிகழ்வுகள் நடப்பதை கேட்கும் போது சந்தோஷம் தான். சிவகுமார் சகோதரரின் புகழ் வாழ்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X